Thursday, November 30, 2006

சமூக சேவைகள் அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் மோசடிகள்.

சமூக சேவைகள் அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் மோசடிகள். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக சேவைகள் சமூக நரத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பலவேறு குழறுபடிகளும் ஏற்பட்டுள்ளதாக பொது மக்களும் அரச அதிகாரிகள் சிலரும் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாபணத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் சமூக சேவைகள் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா ஸ்ரீதர் தியேட்டருக்கு அழைத்து குடும்பத் தலைவர்களை இழந்த பெண்களுக்கு சுய தொழில் முயற்சிக்கு உதவி செய்வதாகவும் மற்றும் வீட்டுத் திட்டத்திற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து குறிப்பிட்ட தமது கட்சியின் அங்கத்தவர்களுக்கும் மற்றும் தமது அணியில் ஆயுதக்குழுவாக இயங்கிக் கொண்ட இருப்பவர்களின் குடும்பங்களுக்கும் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. வீடுகள் கட்டுவதற்கு காணிகள் இல்லாதவர்களுக்கு கூட பணத்தை ஒதுக்கிவிட்டு குறிப்பிட்ட ஒரு சில பிரதேச செயலாளர்கள் மூலம் அந்த நிதியை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளமையும் இதன் காரணமாக கிராம அலுவலர்கள் குறிப்பிட்ட நபர்கள தமது பகுதியில் இல்லையென தெரிவித்த போதிலும் அத்தகைய அறிக்கைகள் எழுதிய கிராம அலுவலர்கள் அலுவலகங்களுக்கு துப்பாக்கிகளுடன் செல்லும் ஈ.பி.டி.பி ஆயுததாரிகள் இவர்களை மிரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.