யாழ் குடாநாட்டில் பெண் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரிப்பு. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் அசாதாரண சூழ் நிலையைத் தொடர்ந்து பெண் உளவாளிகளின் நடமாட்டங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பெண்கள் ஈ.பி.டி.பி ஒட்டுப்படையுடன் இனணந்து செயல்பட்டு வருகின்றார்கள் என்பது அண்மைக் காலத்தில் பொது மக்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று பெண் உளவாளிகள் பொங்கியெழும் மக்கள் படை மற்றும் எல்லாளன் படையினால் சுடப்பட்டு உரிமை கோரப்பட்டுள்ளார்கள். தென்மராட்சிப் பகுதியில் சமுர்த்தி அலுவலராக கடமையாற்றியவரும் கோப்பாயில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் மற்றும் அண்மையில் பல்கலைக்கழக அயலில் உதயகுமார் றஜீதா என்ற பெண்னும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். பெண்களை அழைத்து அவர்களின் வறுமையை நீக்குவதாகக் கூறி பண ஆசையைக் காட்டி தொழில் வழங்கவதாகக் கூறி இராணுவத்தினருக்கு ஒட்டுப்பார்க்கும் நடவடிக்கையில் இத்தகையவர்களை பயன்படுத்தும் செயல்பாட்டில் பெண்களை ஈடுபடுத்துவதாக சிறீதர் திரையரங்குக்குச் சென்று வந்த பொது மக்கள் தற்போது கூறத் தொடங்கியுள்ளார்கள்.





