Saturday, November 25, 2006

அம்பாறையில் அதிரடிப்படையின் முன்நகர்வு முயற்சி...

அம்பாறையில் அதிரடிப்படையின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு- 4 பேர் பலி அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தாண்டியடி காஞ்சிரங்குடா முகாமின் எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று சனிக்கிழமை காலை 7.30மணிக்கு தங்கவேலாயுதபுரம் பாவட்டாப் பிரதேசம் நோக்கி சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதனை முறியடிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். 6 சிறப்பு அதிரடிப்படையினர் காயம் அடைந்தனர். இம் முறியடிப்புச் சமரில், கப்டன் ஜெயப்பிரகாஸ் என்று அழைக்கப்படும் திருக்கோவில் அம்பாறையைச் சேர்ந்த மேகராசா ஜெந்தராஜன், வீரவேங்கை இலக்கியன் என்றழைக்கப்படும் வத்திராயன் வடக்கு தளையடி வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த சிவஞானசுந்தரலிங்கம் சிவரூபன் ஆகிய இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். puthinam.com