Wednesday, November 22, 2006

மனித அவலங்கள் இணைத்தலைமை நாடுகள் எச்சரிக்கை.

மனித அவலங்கள் அதிகரிக்கின்றன. யுத்தநிறுத்தை முறையாக கடைபிடியுங்கள்: இணைத்தலைமை நாடுகள் எச்சரிக்கை. இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களையும் விடுதலை புலிகளும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் கைவிட்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை கடைபிடிக்குமாறு இணைத்தலைமை நாடுகள் மாநாடு முடிவடைந்தையடுத்து. விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களும் உயிரிழப்புகள் தொடர்பில் இணைதலைமை நாடுகள் எச்சரிக்கை விடுக்கிறது.விடுதலைபுலிகள் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை இணைத்தலைமை நாடுகள் கண்டனம் செய்கின்றன. மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தும் போது இதற்கு பதில் தாக்குதலை ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு பொதுமக்களை படுகொலை செய்வதையும் கண்டிப்பதுடன் மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.. அத்துடன் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரின் பாதுகாப்பு தொடர்பில் இரு தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இணைதலைமை நாடுகள் மாநாட்டில் முடிவில் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இலங்கையில் காணப்படும் நிலவரம் தொடர்பில் நாம் கவனத்தில் எடுத்துள்ளோம் இலங்கையிலுள்ள மக்கள் தற்போது கடத்தல் மற்றும் மோதல்கள் தொடர்பாக மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். என நோர்வே உதவி அமைச்சரும் நோர்வே பிரதான அனுசரனையாளருமான எரிக் சொல் ஹெம் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற சமாதான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை இரு தரப்பும் கடினமான மனப்போக்குடன் காணப்படனர் இவ்வறான நிலைமை இணைதலைமை நாடுகள் கவலையடைய செய்கிறது.என ஜப்பனிய தூதுவர் யசுசி அகாசி மாநாட்டின் முடிவில் தெரிவித்துள்ளார். மேலும் ஏ9 நெடுஞ்சாலையூடாக அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு முன்வைத்த யோசனையை இணைத்தலைமை நாடுகள் வரவேற்றதுடன் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான் மற்றும் நோர்வே இலங்கையின் சமாதான முயற்சி நடவடிக்கைக்கு 4.5 மில்லியன் டொலர் நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது