Sunday, March 13, 2011

சிறீலங்கா வான்படை உலங்குவானுர்திகளை பேரீச்சம் பழத்துக்கு கொடுங்கள் -மகிந்தா ஆத்திரம்

சிறீலங்கா வான்படையின் உலங்குவானூர்திகள் இயங்க மறுத்தால் ஒட்டுமொத்த உலங்குவானூர்திகளையும் கைவிட்டு புதியதொரு தொகுதியை கொள்வனவு செய்யுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா கடும் சினத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா கடந்த வாரம் தென்னிலங்கையில் உள்ள மொனராகல பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தார். தேர்தல் கூட்டம் நிறைவடைந்ததும் அவர் அவசரமாக கொழும்பு திரும்பத் திட்டமிட்டிருந்தார்.

ஏனெனில் அங்கு நடைபெற்ற மிக முக்கிய பிரமுகர் ஒருவரின் திருமணத்திற்கு சாட்சி கையொப்பமிடுவதாக மகிந்தா உறுதியழித்திருந்தார்.

ஆனால் மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் பெல்-412 ரக உலங்குவானூர்தியில் மகிந்தா ஏறியபோது அது இயங்க மறுத்துவிட்டது.

அதனை தொடர்ந்து பாதுகாப்புக்கு சென்ற பெல் -212 உலங்குவானூர்தி ஒன்றில் ஏறி மகிந்தா பயணத்தை ஆரம்பித்திருந்தார். பாதுகாப்பு படையினர் சீன தயாரிப்பான வை-12 ரக விமானத்தில் ஏறி வீரவிலவுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் வீரவில விமான நிலையத்தை சென்றடைந்தபோது, அங்கு மகிந்தா காத்திருந்தார். பாதகமான காலநிலையை தொடர்ந்து பார்வைப்புலம் குறைந்ததால் மகிந்தா பயணித்த பாதுகாப்பு உலங்குவானூர்தியும் இயங்க மறுத்ததால் மகிந்தா வீரவிலவில் தரையிஙக்க நேர்ந்துள்ளது.

அதன் பின்னர் அவர்கள் எல்லோரும் வை-12 விமானத்தில் ஏறி கொழும்பை சென்றடைந்துள்ளனர். எனினும் இரத்மலானை பகுதியில் வான்படையினர் தமது 60 ஆவது ஆண்டு விழாவின் கட்காட்சி பணிகளில் ஈடுபட்டதால் அங்கு விமானம் தரையிறங்க முடியவில்லை. அதன் பின்னர் அது கட்டுநாயக்காவுக்கு திருப்பப்பட்டது.

கட்டுநாயக்கா வான்படைத் தளத்தில் தரையிறங்கிய மகிந்தா அங்கிருந்து பிறிதொரு உலங்குவானூர்தி மூலம் சிறீலங்கா நாடாளுமன்ற மைதானத்தை அடைந்து திருமணத்திற்கு சென்றபோது அங்கு முகூர்த்தம் தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மகிந்த வான்படை அதிகாரிகளை அழைத்து “உங்களின் உலங்குவானூர்திகள் தொடர்ந்து இயங்க மறுத்தால், அவற்றை ஒட்டுமொத்தமாக கைவிட்டு, புதிய தொகுதியை கொள்வனவு செய்யுங்கள்” என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.