Friday, March 25, 2011

சிறீலங்கா அரசுக்கு ஜப்பான் அழுத்தம் கொடுக்க வேண்டும்: அகாசியிடம் கூட்டமைப்பு எம்.பி எஸ். சந்திரகாந்தன் வேண்டுகோள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசாங்கத்திற்கு ஐப்பான் அரசாங்ம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஐப்பானிய விசேட தூதவர் யசூசி அகாசியிடம் தமழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்களை மீள்கட்டியெழுப்புவதற்கு ஐப்பான் நேரடியாக நடைவடிக்கை எடுக்கவேண்டும் என ஐப்பானிய விசேட தூதவர் யசூசி அகாசியுடன் தமழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐப்பான் சமாதானம் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் எனும் திட்டத்தின் கீழ் விசேட அழைப்பின் பேரில் இலங்கையில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தலைமையிலான மூவினங்களை கொண்ட புத்திஐீவிகள் 10 பேரை ஐப்பானுக்கு கடந்த 21ம் திகதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் இவர்கள் அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து அரசியல்வாதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இரண்டாவது உலக மகா யுத்ததின்போது அணுகுண்டினால் அழிக்கப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பவற்றை பார்வையிடவுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக ஐப்பானிய விசேட தூதவர் யசூசி அகாசியுடனான சந்திப்பின்போது இவ்வேண்டுகோளை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது நியாயபூர்வமான உரிமைக்காக போராடி வருகின்றன் இவர்களின் இந்த உரிமை போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரித்து தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை பெற்றுத்தர இலங்கை அரசாங்கத்திற்கு ஐப்பான் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடந்தகால யுத்ததினால் வடகிழக்கு தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வீடுழந்து பொருள் இழந்து உறவுகள் இழந்து மண்ணிழந்து அநாதரவான நிலையில் வீதியில் இன்று உள்ளனர்.

இன்று தமிழ் மக்களின் ஏகபிரதி நிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் என்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நிரூபித்துள்ளனர். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத்தர ஐப்பானனும் முற்றும் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

அத்தோடு தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் மற்றும் மனிதாபிமான நடைவடிக்கைகளையும் செய்யவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதூக தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.