சிறீலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களுக்கு அனைத்துலக சமூகம் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ் பெண்களின் அபிவிருத்தி அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போதே இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் கலந்துகொண்ட பல இன பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய பிரித்தானியா பல்கலைக்கழகத்தின் ஆராட்சியாளர் அனபெல்லா சற்றோரிஸ், சிறீலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபையின் 1325 ஆவது விதியை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு புலம்பெயர் தமிழ் சமூகமும், அனைத்துலக சமூகமும் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என லண்டனின் கிங்ஸ்ரன் பகுதி நகரபிதா கிறிஸ்ஸி கிச்கூக் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் பெண்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். வடக்கு கிழக்கில் 89,000 பெண்கள் கணவர்களை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.