Thursday, March 17, 2011

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் மீது கிழக்கு மாகாண சபை அமைச்சர் தாக்குதல்

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் கல்யாண சுந்தரத்தின் மீது இன்று கிழக்கு மாகாண சபை அமைச்சர் துரையப்பா நவரட்ண ராஜா தாக்துல் நடத்தினானர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் அக்கரைப்பற்றில் இருந்து அலிக்கம்பைக்கு சென்று கொண்டிருந்தபோது கண்ணகிபுரத்தில் வழிமறிக்கப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தருமான எட்வின் கிருஷ்ணானந்தராசா தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளான சங்கத்தின் தலைவர் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரித்தது தொடர்பில் ஆத்திரமுற்றே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கிருஷ்ணானந்தராசா தெரிவித்தார்.

ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்திய பொலிஸார் விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.