சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட வழக்கில் இராணுவப் புலனாய்வுத்துறையின் முன்னாள் உறுப்பினரும் மற்றுமொருவரும் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனப் பயங்கரவாத விசாரணைப்பிரிவு நேற்று நீதிமன்றில் தெரிவித்தது.
இக்கொலை குறித்து கைதுசெய்யப்பட்டவர்களின் விவரங்களை பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் நேற்று கல்கிசை நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இதன்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த தவணை விசாரணையின்போது சந்தேகநபர்கள் குறித்த இரகசிய அறிக்கை ஒன்றை பொலிஸார் தாக்கல் செய்திருந்தினர்.
அவர்கள் குறித்த விரிவான மேலதிக விசாரணைகளை அடுத்த நீதிமன்ற விசாரணையில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.