ஐ.நா. பாதுகாப்பு சபை கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, நேற்று முன்தினம் உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரை, போர்ச்சுக்கல் நாட்டின் வெளியுறவு மந்திரியின் உரையாகும். முதலில் சில பாராக்கள், ஐ.நா.பாதுகாப்பு சபை தொடர்புடைய பொதுவான அம்சங்கள் இடம் பெற்று இருந்ததால், தவறான உரை என்பதை அவராலோ, அல்லது அருகில் இருந்த இந்திய அதிகாரிகளாலோ உடனடியாக உணர முடியவில்லை.
தொடர்ந்து அவர் பேசும்போது, ".... போர்ச்சுக்கல் மொழி பேசும் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இரு நாடுகளின் உறுப்பினர் இங்கு இருப்பது மகிழ்ச்சி...'' என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
பாதுகாப்பு சபைக்கு தற்போது தலைமை தாங்குவது பிரேசில் என்பதால், இந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாமல் போய் இருக்கலாம். அடுத்து "....ஐரோப்பிய ஒன்றியம்....'' என்று கிருஷ்ணா பேச்சை தொடர்ந்தபோது, கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய அதிகாரிகள் திகைத்தனர்.
அருகில் இருந்த ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப்சிங் பூரி தவறை கண்டுபிடித்து, எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சுட்டிக்காட்டினார். அதைத்தொடர்ந்து ஏறத்தாழ 3 நிமிடங்களுக்குப்பிறகு சரியான உரையை எஸ்.எம்.கிருஷ்ணா வாசிக்க தொடங்கினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்,
`உரையாற்று'வதற்கு பதிலாக `உரையை படி'க்கும் தலைவர்கள் நமது நாட்டில் இருப்பதால்தான் இந்த குளறுபடி நடந்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளால், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டு வரும் தர்மசங்கடமான நிலையின் உச்ச கட்டம் இது'' என்று குறிப்பிட்டார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.