மூன்று மாதங்களுக்கு மேல் தொடரும் மழைவெள்ளம் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தின் பலமாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணம் ஏதோ வெளிநாட்டில் இருப்பதைப் போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவித அவசர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத அரசு கதிர்காமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம்,தெற்கில் தேசத்தின் மகுடம் கண்காட்சி என குதூகலங்களை நடத்திக் கொண்டிருப்பது கிழக்குமாகாண மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து தவிக்கும் இக்காலப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வெளிநாட்டினரிடம் கோரும் அரசு தெற்கில் சுதந்திரதின கொண்டாட்டம், தேசத்தின் மகுடம் கண்காட்சி என பல கோடி ரூபாய்களை செலவுசெய்து வருவது உலக நாடுகளிடம் இலங்கை நாட்டின் பஞ்சத்தை மூடிமறைப்பதற்கேயாகும்.
தொடர்மழை, நிரம்பிவழியும் குளங்கள் என சுமார் நூறு வருடங்களுக்கு பிறகு மட்டு.மாவட்டம் சந்தித்த மிகப்பெரிய வெள்ளஅனர்த்தம் இரண்டு மாதங்களுக்கு மேலாக நாளாந்த தொழில்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பாமர மக்களின் அவலம் பெரும்போக நெல் விளைச்சலை எதிர்பார்த்து பெரும்தொகை பணத்தை முதலீடு செய்த விவசாயிகளின் விளைநிலங்கள் அழிந்து போனமை கால்நடைகளை நம்பி வாழ்ந்த பண்னையாளர்களின் மாடுகள் அழிந்து போனமை கடலை நம்பிய மீனவர்களின் தொழில் தடைப்பட்டமை என பொருளாதார நெருக்கடிகளோடு இயற்கையின் வீதித்தடைகளாலும் தடைப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் நெருக்கடி என மேலும் சுமைகளையே உருவக்கியுள்ள வெள்ளஅனர்த்தத்தில் யாருக்கு? யார்? உதவி செய்வது என்று தெரியாமல் தவிக்கும் மக்களை வழமையான அறிக்கைளளோடு வேடிக்கைபார்க்கிறது அரசு.
மேற்படி பாதிப்புகளில் இருந்து மீள இன்னும் நான்கு ஐந்து மாதங்கள் ஆகும் என கூறும் மக்கள் தங்களுக்கான பொருளாதார இழப்புக்களை ஈடுசெய்ய முடியாத நிலையில் அரசையும், தமிழ்கட்சிகளின் தலைவர்களையும், அரசசார்பற்ற நிறுவனங்களையுமே நம்பியுள்ளனர். ஆனால் மேற்படி அமைப்புக்களால் இதுவரை 25வீதமான நிவாரணப்பணிகளை கூட மேற்கொள்ளக்கூடிய ஆளுமை இல்லாமை, பாதிக்கப்பட் மக்களின் இயல்வுவாழ்க்கையை முழுமையாக கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆனால் மட்டு.மாவட்ட வெள்ள அனர்த்தப் பாதிப்புக்களை சரியாகக் கையாண்ட முஸ்லீம் அரசியல் கட்சிகள் தங்கள் இனத்திற்கான நிவாரண பணிகளை சரிவரச்செய்ததோடு அரசிடம் இருந்து எதையெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால் மக்களுக்காகத்தான் நாங்கள் அரசுடன் சேர்ந்து இயங்குகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளால் இதுவரை அரசிடம் இருந்து உருப்படியாக எதையும் பெற்றுக்கொள்ள முடியாமல் புலம்பெயர் சமூகத்தினரிடமும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும் கையேந்திநிற்கும் துர்ப்பாக்கிய நிலையிலேயே உள்ளனர். எனவே தமிழர்களுக்காக அரசுடன் சேர்ந்தவர்களால் உடனடி தேவையான வெள்ள நிவாரணத்தையே பெற்றுத்தர முடியவில்லை என்றால் தமிழர்களுக்கான உரிமைகளை எப்படி பெற்றுத்தர போகிறார்கள்? என்கின்றனர் மக்கள்.
அவலங்களும் அநீதிகளும் தொடரும்வரை நாங்களும் தொடருவோம் தமிழருக்காக….!
- விவேகன்
நன்றி: சரிதம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.