யாழ்ப்பாணத்தில் குடும்பங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் குடும்பப்புகைப் படம் எடுக்கும் நடவடிக்கையும் இராணு வத்தினரால் மேற்கொள்ளப்பட்டுளளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்;
பதிவு செய்வதற்கும் குடும்பப் புகைப்படம் எடுப்பதற்கும் தமிழ்மக்கள் ஒன்றும் கிரிமினல் குற்றவாளிகள் இல்லை, இவ்வாறான காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு அரசாங்கம் இவற்றுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் இன்றுகாலை 11மணிக்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும்போது; நேற்று முன்னிதினம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் குடும்பங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையும் குடும்பப்புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இனங்களுக்கிடையிலான இன நல்லுறவை மேம்படுத்த ஒருபோதும் உதவப்போவது கிடையாது. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகின்றது. இந்நிலையில் உண்மையை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு மக்களின் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளது.
இதனடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவேண்டும், உயர்பாதுகாப்பு வலங்களில் மக்கள் குடியமர்த்தப்படவேண்டும், நீண்டகாலம் சிறைகளில் உள்ளவர்கள் விடுவிக்கப்படவேண்டும், 2009 யுத்தகாலத்தில் சரணடைந்தவர்கள் விடுவிக்கப்படவேண்டும், இராணுவ தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவேண்டும் போன்ற சிபார்சுகளை உண்மையை கண்டறியும் குழு அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
இவை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படவேண்டும் என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.
இதே போல் கடந்த 3ம் திகதி நடைபெற்ற அரசுடனான சந்திப்பின் போது கூட அரசாங்கம் எமக்குச் சொன்னது உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை எனவும் இராணுவ பாதுகாப்பிற்கென சில முகாம்கள் மட்டும் இருப்பதாகவும் அவையும் விரையில் நீக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் சம்பூர், வலிகாமம் வடக்கு போன்ற பகுதிகளி இன்னமும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவும் அங்கேயிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் அகதிகளாக வாழ்வது தொடர்பிலும் நாம் எடுத்துக் கூறினோம். நிலை இவ்வாறிருக்க அரசாங்கம் மற்றொரு புறம் தமிழர்களை முற்றாக கிரிமினல்களாக பார்க்கின்ற நிலையும் உள்ளது.
ஜே.வீ.பியும் கிளர்ச்சி செய்தார்கள். அங்கேயும் மக்கள் இறந்தார்கள். அப்படியென்றால் சிங்கள மக்களையும் பதிவு செய்யட்டும் பார்க்கலாம். இப்படியான காட்டு மிராண்டித்தனங் களை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். குற்றவாளிகளை கண்டறிவதற்கு இது பொறிமுறை கிடையாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.
அதற்கு மேல் இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றதா, அல்லது இராணுவம் தன்னிச்சையாக மேற் கொள்கின்றதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
சமாதானத்திற்கான விருது பெற்றவராம் தற்போதைய யாழ்.மாவட்ட பாதுகாப்புபடையினரின் கட்டளைத்தளபதி மகிந்த கத்துருசிங்க. அவரது தலைமையிலான படையினர் இப்படி மேற்கொள்ளவது சரியா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.