இந்தியாவில் அடுத்தடுத்து வெளிவந்துகொண்டிருக்கும் ஊழல் விவகாரங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
அவர் மிக அரிதாகப் பங்குகொண்ட ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஊழல் விவகாரங்களால் அரசாங்கத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
தொலைதொடர்புத்துறையால் தனியாருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதிலும், சென்றவருடம் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுப் பணிகளிலும் பெருமளவில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் தன்னிலை விளக்கம் தர வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது என்பதிலும், ஒருவர் எந்த இடத்தில் இருந்தாலும் அவர் தவறு செய்துள்ளார் என்று நிரூபணம் ஆகும்போது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என்பதிலும் தான் மிகவும் தீர்மானமாய் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தனது அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட முறையிலும் தன்னைப் பாதித்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனாலும் திராணியற்றப் பிரதமர் என்று தன்னைப் பலரும் வருணிப்பது பொருத்தமான விமர்சனம் அல்ல என்றும் அவர் கூறினார். இப்படியான ஊழல்கள் இந்தியாவின் தன்னம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மன்மோகன் சிங்குடைய அரசாங்கம் தற்சமயம் பெரும் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடிவருகிறது என்று சொல்லலாம். தனது அரசாங்கத்தில் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, செல்லிட தொலைபேசி அலைக்கற்றை உரிமங்களை தள்ளிப்போன விலைக்கு விற்றுவிட்டார் என எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகியுள்ளார்.
அவர் தற்போது மத்திய புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். தவிர சென்ற வருடம் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஏற்பாட்டுக் குழுவினர் வழங்கியிருந்த பணி ஒப்பந்தங்களில் பெரும் ஊழல் நடந்ததாகத் தெரிவிக்கப்படுவது தொடர்பிலும் விசாரணைகள் நடந்துள்ளன.
இவற்றைத் தாண்டி எஸ் பேண்ட் எனப்படும் நவீன தகவல் பரிமாற்ற அலைக்கற்றையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியாருக்கு விற்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்திலும் முறைகேடுகள் தென்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.