Thursday, February 17, 2011

துன்பத்தை அனுபவித்த வடபகுதி மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போயுள்ளனர் - திஸ்ஸ அத்தநாயக்க

பல வருடங்களாக துன்பத்தை அனுபவித்த வடபகுதி மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போயுள்ளனர். வடக்கின் அபிவிருத்தியென சொல்லப்படும் வேலைத்திட்டங்கள் கூட போதுமானளவில் மேற்கொள்ளப்படவில்லை

என ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இன்று காலையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஐ.தே.க.வின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளவில்லை. அவர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைப்பதற்காகவே வடபகுதிக்கு ஐ.தே.க. பிரமுகர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளளர்.

தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் இலக்கை அடைவதற்காகவே யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐ.தே.க. களமிறங்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதை இந்த அரசு பின்னடிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எனவே, உடனடியாக தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.