பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள டெம்ஃபேர்ட் என்கிற இடத்தில் அமைந்திருக்கும் 16 மாடிக் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிர் இழந்த இரு தமிழ் பெண்களின் புகைப்படங்கள் தமிழ்.சின்.என். இற்கு கிடைக்கப் பெற்று உள்ளன.
இருவரும் மைத்துனிமார் ஆவார்.
ஒருவர் சந்திராவதி தர்மலிங்கம். வயது-59. மற்றவர் குணாளினி அழகரட்ணம். வயது- 42.
தீ மூட்டப்பட்ட சம்பவத்தை மனிதக் கொலையாகவே பார்க்கின்றது பொலிஸ்.
சந்திராவதி தர்மலிங்கம் கடந்த ஏழு வருடங்களுக்கு பின் முதல் தடவையாக பிரிட்டன் வந்து இருக்கின்றார். இவர் ஒரு குடும்பப் பெண். கணவர் 2003 ஆம் ஆண்டு இறந்து போனார். இத்தம்பதிகளுக்கு இரு பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும். பேரப் பிள்ளைகளும் உண்டு. பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பிரித்தானியாவிலும், பிரான்ஸிலும் இருக்கின்றனர். பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஆகியோரைக் காண 2004
ஆம் ஆண்டு இந்நாடுகளுக்கு வந்து இருந்தார். ஏழு வருட பிரிவுக்கு பின்னர் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஆகியோரைக் காண வந்திருந்தபோதே இறந்து விட்டார்.
இவரது மைத்துனி குணாளின். குணாளினிக்கு இரு பிள்ளைகள். குணாளினி கடந்த ஆறு வருடங்களாக லண்டனில் வசிக்கின்றனர். ஆறு வருடங்களுக்கு கணவன் பொன்னம்பலத்தை காண வந்து இருந்தார். இவரது மூத்த மகன் கோகிலவரதனுக்கு வயது-17. இளைய மகன் கிஷானுக்கு வயது-05. சந்திராவதி மைத்துனி குணாளினியைக் காணவே கடந்த வெள்ளிக்கிழமை மாலை இம்மாடித் தொடருக்கு வந்து இருந்தார். 16 ஆவது மாடிக் கட்டிடத்தில் இவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டில் இருந்து நெருப்பு மூண்டது.
தீயணைப்புப் பணியாளர்கள் 50 பேர் விரைந்து செயல்பட்டபோதும் இவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இவர்கள் இருவரும் உயிர் துடிதுடிக்க தீயில் கருகி இறந்த பயங்கரத்தை தரையில் இருந்து நேரில் பார்த்தனர்.
இவ்ர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
மிகவும் பயங்கரமான வன்னி யுத்தத்தில் உயிர் தப்பிய இவர்கள் லண்டனில் தீக்கிரையாகி விட்டனர்.
சந்திராவதியின் புதல்விகளில் ஒருவரான நந்தினி (வயது-38) தெரிவித்தவை வருமாறு:-
"அம்மா லண்டனுக்கு வந்து எங்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். வன்னி யுத்தத்தில் உயிர் பிழைத்து வந்து இருந்தார். ஆனால் தீ விபத்தில் அவர் உயிரிழந்தமை பேரிடியாக உள்ளது. நானும் குடும்பத்தினரும் மிகவும் மன்ம் உடைந்த நிலையில் வேதனையின் உச்சத்தில் இருக்கின்றோம். "
சந்திராவதியின்புதல்வர்களில் ஒருவரான சந்திரலிங்கம் தாயாரின் புன்னகை மாறாத முகம்தான் எப்போதும் கண் முன் தெரிகின்றது என்கின்றார்.
குணாளினிக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
குணாளினியின் மருமகன் த. மகேந்திரராஜா ( வயது-21) குரல்கள் தழுதழுக்க தெரிவித்தவை வருமாறு:-
"மாமியார் ரொம்பவும் நல்லவர். எல்லோருக்கும் நல்லவற்றையே செய்பவர். குடும்பத்தில் எங்கள் எல்லோருக்கும் இவரின் மரணம் மிகப் பெரிய இழப்பு. இவரது கணவனைச் சந்தித்து உறவினர்கள் ஆறுதல்கள் கூறுகின்றனர். இவர் எப்போதும் அதிகப்படியான நேரங்களை பிள்ளைகளுடன் செலவு செய்தார். அவர்களை நன்றாக பராமரித்தார். அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பேருதவியாக இருந்தார்."

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.