திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் கனரகத் தொழில்துறைக்கான சிறப்பு வலயம் ஒன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை கடந்த புதன்கிழமை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.மிச்செல் கொன்சோடியம் என்ற அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட பல்தேசிய நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்றே திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் கனரகத் தொழில்துறைக்கான சிறப்பு வலயம் ஒன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மிச்செல் கொன்சோடியம் என்ற அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட பல்தேசிய நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்றே இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிறேசில் மற்றும் இலங்கையிலுள்ள தமது பங்காளர்களுடன் இணைந்து இந்த பல்தேசிய நிறுவனம் சம்பூரில் கற்கரி, இரும்பு சார்ந்த கனரகத் தொழில்துறையும், இயந்திர மற்றும் சீனி சுத்திகரிப்பு தொழிற்சாலைகளையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இங்கு கனரகத் தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மிச்சேல் கொன்சோடியம் நிறுவனத்துக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இங்கு முதற்கட்டமாக 700 மில்லியன் டொலர் முதலீடு மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சம்பூரில் 97 சதுர கீ.மீற்றர் பிரதேசத்தை உள்ளடக்கியதாக சிறப்பு கனரக தொழில்துறை வலயம் உருவாக்கப்படும்.
ஆழமான துறைமுக வசதிகளைக் கொண்டிருப்பதால் இங்கு முதலீடு செய்வதில் அவுஸ்ரேலிய நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. திருகோணமலைக் குடாவின் நுழைவாயில் பகுதியில் அமைந்த நிலமே இந்த கனரகத் தொழில்துறை வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இது ஏற்கனவே இந்திய நிறுவனம் ஒன்றுக்கு அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சம்பூரில் இந்திய உதவியுடன் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக அந்தப் பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்துள்ளது.
இதன்காரணமாக அங்கிருந்து பெருமளவு தமிழர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு இலங்கை அரசு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் இந்தப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் முற்றாகப் பாதிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கிய போதும் அது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதை இழுத்தடித்து வருகிறது.
இலங்கையின் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டு ஆவணம் ஒரு வருடத்துக்கும் மேலாக ஆராயப்பட்டு வருகிறது.
அத்துடன் அவர் இந்தியாவிடம் இதுதொடர்பாக 93 கேள்விகளுக்கு விளக்கமளிக்குமாறும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.