Friday, February 25, 2011

வெளிநாடுகளில் தமிழீழ அரசாங்கம் வேரூன்ற ஆரம்பித்து விட்டது: அமைச்சர் நிமல் சிரிபால டீ சில்வா

வெளிநாடுகளில் தமிழீழ அரசாங்கம் வேரூன்றத் தொடங்கி விட்டதாக அமைச்சர் நிமல் சிரிபால டீ சில்வா நேற்றுப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குக் கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் வெளிநாடுகளில் தமிழீழ அரசாங்கம் வேரூன்றத் தொடங்கி விட்டது. அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் நிதி சேகரிப்பு நடவடிக்கையிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டியுள்ளது.

அதன் காரணமாகவே, விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் கூடிய செயற்பாடுகளை முறியடிக்கவே அவசர காலச்சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் அமுல்படுத்துகின்றது. அதனை நீக்குவதற்கான தருணம் இன்னும் வரவில்லை.சாதாரண சட்டங்களின் கீழ் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

நாட்டின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுவது அவசியமானது. அந்த வகையில் அவசர காலச்சட்டமும் அவசியமானது. அதனை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கெதிராக அரசாங்கம் நடவடிக்கை என்றும் அவர் தனது பாராளுமன்ற உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.