வடக்கில் புலிகள் தொடர்ந்தும் செயற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன. வேறு அரசியல் கட்சிகளில் பின்னால் இருந்து அவர்கள் அரசியல்ரீதியாக இயங்க முடியும்.இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புலிகள் தொடர்ந்தும் செயற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவாகவே உள்ளன. வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் இருந்து அவர்கள் அரசியல் ரீதியாக இயங்கமுடியும்.ஆனால் அவர்களால் வெளிப்படையாகவோ அல்லது இராணுரீதியாகவோ இனிமேல் செயற்படமுடியாது என்று நான் உறுதியாக நம்பவில்லை. வேறு அரசியல் கட்சிகளின் ஊடாக அவர்கள் பலத்தைக் காட்டமுனையலாம்.வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு ஊடகங்கள் என்மீது குற்றம்சாட்டின. ஆனால் அது எனது தவறல்ல. அது மொழிபெயர்ப்பினால் ஏற்பட்ட தவறு.ஒரு தொழில்நுட்பத்தவறு.இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுவருகின்றோம். என்று டக்ளஸ் கூறியுள்ளார்.
உண்மையில் டக்ளஸ் இவ்வாறு கூறுவதற்கு காரணம் என்ன?
இப்படி அறிக்கை விடுவதன் மூலம் குடா நாட்டில் அரசுக்கு எதிரான அரசியல்வாதிகளை கொலைசெய்வதற்கான முன்னறிவிப்பா? அல்லது யாழ் குடா நாட்டில் புதிதாக ஓர் களையெடுப்பிற்கான முன்னோட்டமா? ஏனெனில் இராணுவமும் வீடு வீடாக சென்று பதிவுகளை மேற்கொள்கின்றனர். ஆகவே இது ஓர் மிகப்பெரும் களையெடுப்பிற்கான முன்னோட்டமே என கூறமுடியும்.
அடுத்ததாக டக்ளஸ் விடுதலைப்புலிகள் மீண்டும் வரலாம் என கூறுவது, தனது இருப்பிற்கான அவசியத்தை அரசாங்கம் மற்றும் பலருக்கு உணர்த்துவதற்காகவும் இருக்கலாம். காரணம் அண்மையில் நடந்துவருகின்ற கசப்பான விடயங்கள் அரசாங்கம் டக்ளசினை ஒதுக்குவதாக கருதப்படுகின்றது. அரசாங்கம் தன்னைத்தவிர மற்ற கட்சிகளுடன் சென்றால் அந்த கட்சிகளில் புலிகள் ஊடுருவலாம் என்ற பிரமையினை ஏற்படுத்தி தான் தான் என்றுமே புலிகளுக்கு இடம்கொடுக்காத நபர் என்பதனை அரசாங்கத்திற்கு கூறும் செய்தியாகவும் இருக்கலாம். அரசாங்கம் ஒரு பக்கம் கூட்டமைப்புடன் பேசிவருவதும், இன்னொருபக்கம் கேபி அவர்களை அரசியலுக்கு கொண்டுவருவதிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த விடயங்கள் டக்ளசின் அரசியல் இருப்பிற்கு பிரச்சினை தானும் கருவேப்பிலையா என்ற பதட்டம் இதனாலும் புலிகள் மீண்டும் அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவி செயற்படப்போகின்றனர் என கூறுவதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.