Friday, February 11, 2011

சோமாலியக் கடற்கொள்ளையருக்கு சிறிலங்கா கடற்படை உதவி – இந்திய விசாரணையில் அம்பலம்

இந்து சமுத்திரத்தில் சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் தந்திரோபாய உதவிகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிடுகையில்,

“ சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் தந்திரோபாய உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அண்மையில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சோமாலியக் கடற்கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த விபரம் தெரியவந்துள்ளது.

சோமாலியக் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கையை கண்டும் காணாமல் சிறிலங்கா கடற்படை விட்டு விடுகிறது.

தமிழ்நாட்டை அண்டிய கடல்பகுதியில் கடற்கொள்ளையர்கள் எரிபொருளைப் பெறுவதற்கும் தங்குவதற்கும் இடமளிப்பதாகவும் சிறிலங்கா கடற்படை மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலட்சதீவுக் கடற்பகுதியில் வைத்து சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தாய்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் கைப்பற்றியிருந்தன.

52 பேர் இந்தக் கப்பலில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 28 பேர் சோமாலியக் கடற்கொள்ளையர்களாவர்.

இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, இலட்சதீவு கரையோரப் பகுதிகளில் இந்தியக் கடற்படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையர்களுக்கு வேறு படைகளும் உதவியுள்ளதை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதிப்படுத்தியுள்ளார்.

“கடற்கொள்ளையர்களுக்கு வேறு படைகள் உதவியுள்ளன.

அந்தப் படைகள் எவை என்று இன்னமும் கண்டறியப்படவில்லை.

விசாரணைகள் நடைபெறுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு சிறிலங்கா கடற்படை உதவும் விவகாரம் நிரூபிக்கப்படுமானால் இந்தியாவின் கடுமையான கண்டனங்களுக்கு சிறிலங்கா முகம் கொடுக்க நேரலாம்.

சிறிலங்கா கடற்படை மறுப்பு

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு சிறிலங்கா கடற்படை உதவி வருவதாக இந்திய ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது.

இது ஆதாரமற்ற போலியான செய்தி என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

தென்னிந்திய ஊடகங்கள் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள சிறந்த உறவைச் சீர்குலைக்கவே இவ்வாறான செய்திகளை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.