Sunday, February 13, 2011

பிரிட்டனில் நடைபெற்ற தியாகச்சுடர்கள் அப்துல் ரகீம், முத்துக்குமார், முருகதாசன் உட்பட 20 ஈகை கொடையாளர்களின் வீரவணக்க நிகழ்வு

தியாகச்சுடர்கள் அப்துல் ரகீம், முத்துக்குமார், முருகதாசன் உட்பட 20 ஈகை கொடையாளர்களின் வீரவணக்க நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலையில் பிரித்தானியாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விடுதலைத் தீயினை தம்முடலிலே ஏற்றி விழுதாக எரிந்த அப்துல் ரகீம்இ முத்துக்குமார், முருகதாஸ், கோகுலகிருஸ்ணன், சிவப்பிரகாசம், எழில்வளவன், பாலசுந்தரம், மாரிமுத்துஇ சிவானந்தன், ஸ்ரிவன், ஜெகதீசன், ஆனந், சுப்பிரமணி, ராஜசேகர், அமரேசன், இராஜா, சீனிவாசன், இரவிச்சந்திரன், தமிழ்வேந்தன், இரவி உட்பட இருபது வீர மறவர்களையும், நாட்டுப்பற்றாளர் திரு. புண்ணியமூர்;த்தி சத்தியமூர்த்தி அவர்களையும் நினைவு கூரும் எழுச்சி நிகழ்வு Alperton Community School, Wembley யில் 12-02-2011 சனிக்கிழமை மாலை 6.45க்கு பொதுச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது.

பொதுச்சுடரினை 1970ல் தமிழ் மாணவர் பேரவையை ஸ்தாபித்தவரனா திரு. சத்தியசீலன் அவர்கள் ஏற்றினார். ஈகைச்சுடர்னை தியாகச்சுடர் முருகதாஸனின் தாயார் திருமதி வர்ணகுலசிங்கம் ஏற்றினார். ஈகைப் பெரொளி முத்துக்குமார், முருகதாசனின் திருவுருவ படங்களுக்கு முருகதாசனின் தந்தையார் கணபதி வர்ணகுலசிங்கம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.

ஊடகவியளார் நாட்டுப்பற்றாளர் திரு. புண்ணியமூர்;த்தி சத்தியமூர்த்தியின் திருவுருவ படத்திற்கு முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்த மூர்த்தி அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழீம் இசைக்குழுவினரின் எழுச்சிகானங்கள் முருகதாசனுக்கு சமர்ப்பணமான பாடலோடு ஆரம்பித்தது. அதன்பின்னர் திரு. சத்தியசீலன்இ திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்களின் சிறப்புரைகளும் மற்றும் கவிதை பேச்சு நடனநிகழ்வுகள் என மண்டபம் நிறைந்த மக்களுடன் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.