[செவ்வாய்க்கிழமை, 15 மே 2007]
யாழ். மருதனார்மடம் விவசாயக் கல்லூரிப் பண்ணைக்கு அருகில் மாணவர் குழுவினரால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது.
மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் சென்று கொண்டிருந்த 64 ஆம் இலக்க பாதைக்கான பேரூந்தினை வழிமறித்த ஆறு பேர் கொண்ட குழுவினர், பயணிகளை இறக்கிவிட்டு எரியூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரூந்து எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரின் முகாம் உள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றதுள்ளது.

மருதானார்மடத்தில் இடம்பெற்ற பேரூந்து எரிப்பு படைப்புலனாய்வாளர்களின் திட்டமிட்ட சதி.ஆனால் இதை இப்படியே விட்டால் ஆபத்தானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம்.
ReplyDelete