Saturday, May 12, 2007

விடுதலைப் புலிகளை வெளியேற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல்: கிழக்கு இராணுவத் தளபதி.!!

[சனிக்கிழமை, 12 மே 2007] எதிர்வரும் சில நாட்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றிய பின்னர் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்காப் படையின் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண இராணுவத் தளபதி ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கின் பல பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தொப்பிக்கல பகுதியில் உள்ளனர். வாகரைப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீளக்குடியமர்த்தும் வேலைகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்றார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 23 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டின் தளபதியான லெப். கேணல் டபிள்யூ. ஏ.வி. அனுரா சுதசிங்க கூறியதாவது: பிரதேச செயலகங்கள், பேரூந்து நிலையங்கள், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் என்பன வாகரையில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. மருத்துவமனை அங்கு உள்ள மருத்துவர்களின் உதவியுடன் இயங்குகின்றது. தபால் நிலையங்கள், பாடசாலைகள் என்பனவும் இயங்க ஆரம்பித்துள்ளன. கடுமையான காலநிலை கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை பாதித்துள்ளது. இந்த பிரதேசம் அதிகளவான கண்ணிவெடிகளை உடைய பிரதேசம் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.