Thursday, May 03, 2007

வவுனியாவில் இராணுவ முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 2 சடலங்கள் மீட்பு.

[வியாழக்கிழமை, 3 மே 2007]

வவுனியா பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.

பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் இராணுவத்தினர் முன்னேற முயற்சித்தனர்.

இந்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.



இதில் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரின் சடலங்களும் இராணுவத் தளபாடங்களும் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மோதலில் வீரவேங்கை இசையரசன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும், செந்தூரன் சிலையடி 5 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சிறிதரன் றஞ்சித் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.