சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் ஆயுத தளபாடங்களின் விற்பனையானது ஒரே ஆண்டில் 1.4 மில்லியன் டொலரிருந்து 60.8 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
சிறார்களை படையணிகளில் சேர்ப்பது தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் 2006 ஆம் ஆண்டு அறிக்கை கடந்த மார்ச் 6 ஆம் நாள் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் 25 நாடுகளின் படையணிகளில் சிறார் சேர்ப்பு தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தது.
அமெரிக்காவினால் பட்டியலிடப்பட்ட 25 நாடுகளுக்கு அமெரிக்காவின் இராணுவ உதவி எத்தகையதாக இருக்கிறது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் அமைப்பான பாதுகாப்புத் தரவுகளுக்கான மையம் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
- படையணிகளில் சிறார்களை சேர்த்தல் மற்றும் முன்னாள் சிறார் படையினருக்கான மறுவாழ்வுத் திட்டங்களை 25 நாடுகள் மேற்கொள்கின்றன.
- அங்கோலா, லைபீரியா, பராகுவே, செச்சின்யா ஆகியவற்றில் 2006 ஆம் ஆண்டு சிறார்கள் படையணிகளில் சேர்க்கப்படவில்லை.
-அல்ஜீரியா, இந்தியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் படையணிகளில் சிறார் சேர்ப்பு தொடர்பான விவரங்கள் உள்ளதாக தெர்விக்கப்பட்டுள்ளது.
- 2005 ஆம் ஆண்டு அறிக்கையில் தான்சானியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சிறார்கள் படையணிகளில் புதிதாக சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் இந்நாடுகளில் புதிதாக சேர்க்கப்பட்டதாக தகவல் இல்லை.
- அமெரிக்காவினால் பட்டியலிடப்பட்டுள்ள 25 நாடுகளில் 13-இல் 18 வயதுக்கும் குறைவானோர் அரசாங்கம் மற்றும் அரசாங்கமற்ற குழுக்களின் படையணிகளில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய 13 நாடுகளில் 11 நாடுகளுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசாங்கம் இராணுவ உதவி வழங்கி வருகிறது.
- இந்த 13 நாடுகளில் 9 நாடுகளில் சிறார்களை படையணியினராக பயன்படுத்தி வருகின்றனர் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அதேபோல் பராகுவே, ருவாண்டா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு படையணிகளில் சிறார் சேர்க்கப்பட்டமைக்கு ஆதாரமில்லை என்று தெரிவித்தது.
- மேலும் சிறிலங்காவில் அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய துணை இராணுவக் குழுக்களினால் படையணிகளில் சிறார் சேர்க்கப்படுகின்ற புதிய தரவுகள் இடம்பெற்றுள்ளன.
- அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற துணை இராணுவக் குழுக்களினால் படையணிகளில் சிறார் சேர்க்கப்படுகின்ற 9 நாடுகளில் 8 நாடுகளுக்கு 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இராணுவ உதவி செய்து வருகிறது.
- சிறிலங்காவுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் 1,400,000 அமெரிக்க டொலர் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியது. 2007 ஆம் ஆண்டு இத்தொகையானது 60,800,000 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:புதினம்

எல்லாம் விடுதலை புலிகளுக்கு அன்பளிப்பாக கையளிக்க இலங்கை அரசு வாங்குது எல்லாம் நல்லதுக்குதானே.
ReplyDeleteஆயுத விற்பனையாளர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நன்றாக விற்றுத்தள்ளி விட்டார்கள்.
ReplyDeleteஇந்த வருடத்தில் இலங்கையில் ஆயுதங்களுக்குப் பஞ்சமே இல்லை.
புலிகளும் கப்பலில் ஆயுதங்கள் கொண்டுவரவேண்டிய அவசியம் இல்லை.
பயங்கரவாத அரசிற்கு ஆயுதங்கள் கொடுக்கும் அமெரிக்காவை தண்டிப்பது யார்?
ReplyDeleteகடனைக் கொடுப்பதை குறைத்து, விற்பனையை அதிகரிக்கிறாங்களோ?