Saturday, April 07, 2007

வவுனியா கிளைமோர் தாக்குதலை நடத்தியது இராணுவ புலனாய்வுப் பிரிவு: இளந்திரையன்.!!

[சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007]

வவுனியாவில் பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து மீது கிளைமோர் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் மதிப்பைச் சீர்குலைக்கும் கொடூர நோக்கத்துடன் அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையிலான குண்டுவெடிப்புகளை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களில் இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகள் மீளத் தொடங்கியுள்ளது.

மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்கெனவே சர்வதேச சமூகத்தின் முன்பாக அவமானகரமான முகத்தோடு சிறிலங்கா நிற்கிறது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் மதிப்பைச் சீர்குலைக்க இத்தாக்குதல்களை சிறிலங்கா தரப்பு மேஎற்கொள்கிறது என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.