Wednesday, April 11, 2007

யாழ். குடாநாட்டிலிருந்து 7 மாதங்களில் 40,000 மக்கள் வெளியேறினர்.!!!

[புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007] யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடந்த 7 மாதங்களில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியிருப்பதாக யாழ். செயலக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகின்றது. யாழ். மாவட்டத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடையிலான பிரதான தரை வழிப்பாதை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மூடப்பட்டதையடுத்து குடாநாட்டு மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இருப்பும் கேள்விக்குறியானது. இந்த 7 மாத இடைவெளிக்குள் யாழ். குடாநாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு வகைகள், சேவைகள் மருந்து வகைகள் போன்றவற்றுக்கு பெரும் பற்றாககுறையும் காணப்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கும் முகம் கொடுத்தனர். மேலும் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் தோன்றிய சிக்குன்குனியா காய்ச்சலினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், நோய் வாய்ப்பட்ட வயோதிபர்கள் பலர் சிக்குன்;குனியா காய்ச்சலினால் உயிரிழக்க நேரிட்டது. யாழ். குடாநாட்டுக்கும் ஏனைய வெளிமாவட்டங்களுக்கும் இடையிலான சீரான போக்குவரத்துச் சேவைகள் உரிய தரப்பினரால் வழங்க முடியாது. இத்தகைய அவலங்களை எதிர்நோக்கிய பல வசதி படைத்த பலர் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். மேலும் யாழ். மாவட்டத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடையேயான சீரான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் அவசர தேவைகளுக்கு குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்கோ, வெளிமாவட்டங்களிலிருந்து குடாநாட்டுக்கோ செல்ல முடியாத காரணத்தினால் பலர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை காணப்படுகின்றது. யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறியவர்கள் பலர் வவுனியா, திருகோணமலை, சிறிலங்காவின் பல பகுதிகளிலும் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே, பல்வேறு தேவைகள் கருதி சுமாhர் 8,000 பயணிகள் பயண அனுமதி பெற்ற நிலையில் போக்குவரத்துக்காக கப்பல் மற்றும் வானூர்தி சேவைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.