Monday, March 05, 2007

மூத்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரி, அரச சார்பற்ற நிறுவன தலைவர் கைது.

[திங்கட்கிழமை, 5 மார்ச் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி மூத்த பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, அரச சார்பற்ற நிறுவன தலைவர் ஆகியோர் சிறிலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி வெள்ளவத்தையில் உள்ள தமிழ் தொழிலதிபர் ஒருவரின் இல்லத்தில் இருந்தும், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தின் தலைவர் டிவுலப்பிட்டிய இல்லத்தில் இருந்தும் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருப்பதாக பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இவர்கள் இருவரும் கிளிநொச்சிக்கு பல தடவைகள் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்தித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக இதுவரையில் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.