[வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2007]
வவுனியா மேற்கில் பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தைக்கு மேற்காக பாலமோட்டைப் பகுதி விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கிய நகர்வை மேற்கொண்டனர்.
முன்னகர்ந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை முறியடிப்புத் தாக்குதலை தொடுத்தனர்.
இதனையடுத்து படையினர் படை உபகரணங்கள் சிலவற்றை கைவிட்டு இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடிவிட்டனர்.
இந்த முறியடிப்புத் தாக்குதலையடுத்து ஓமந்தைப்பகுதிக்கு சிறிலங்கா வான்படை உலங்குவானூர்தி அவசர அவசரமாக வந்து படுகாயமடைந்த படையினரை அநுராதபுரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
அனுராதபுர மருத்துவமனை வட்டாரங்களின்படி படையினர் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பினரின் தகவல்களின் படி 4 பேர் கொல்லப்பட்டதாகவும் 15 படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.