[வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ் மக்களை ஒடுக்க இலங்கை அரசு பாகிஸ்தானிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் ஆயுதங்கள் பெறுவதைத் தடுக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் மாநிலத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை மத்திய அரசில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழும் சிங்களமும் தேசிய மொழிகளாக ஏற்கப்படட வேண்டும். விடுதலைப் புலிகளின் போரிடும் திறனையும் உறுதியையும் பாராட்டுகின்ற அதே நேரத்தில் அந்த வழியால் மட்டும் தீர்வு காண முயற்சிப்பதைக் கைவிட்டு தமிழ் மக்கள் மற்ற போராட்டக் குழுக்களையும் ஒன்று திரட்டி சுமூக அரசியல் தீர்வு காண முன்வருமாறு விடுதலைப் புலிகளையும் வேண்டுகிறோம். இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு தன் செல்வாக்கை இலங்கையின் மீது பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய கூட்டணி அரசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்தும் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருப்பதும் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்கள், திராவிட அரசியல் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு அப்பால் இடதுசாரிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி:புதினம்
Friday, March 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)






//தமிழ் பேசும் மக்களுக்கான தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும். அமைக்கப்படும் மாநிலத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கை மத்திய அரசில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழும் சிங்களமும் தேசிய மொழிகளாக ஏற்கப்படட வேண்டும்.
ReplyDeleteவிடுதலைப் புலிகளின் போரிடும் திறனையும் உறுதியையும் பாராட்டுகின்ற அதே நேரத்தில் அந்த வழியால் மட்டும் தீர்வு காண முயற்சிப்பதைக் கைவிட்டு தமிழ் மக்கள் மற்ற போராட்டக் குழுக்களையும் ஒன்று திரட்டி சுமூக அரசியல் தீர்வு காண முன்வருமாறு விடுதலைப் புலிகளையும் வேண்டுகிறோம்.///
Good...
Asuran