[திங்கட்கிழமை, 5 மார்ச் 2007] விடுதலைப்பலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் தனது ஒலிபரப்பை வன்னியில் இருந்து ஐரோப்பா மற்றும் தெற்காசியநாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன. தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 69ம் ஆண்டு பிறந்த தினத்தன்று புலிகளின் குரல் தனது செய்மதி ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் ஒலிபரப்பை தொடக்கிவைத்துள்ளார். இவ் ஒலிபரப்பானது தேசியத்தொலைக்காட்சி ஒலிபரப்பாகும் அதே அலைவரிசையில் யூரோஸ்ரார் செய்மதியில் (11.506 GHz symbol rate 2894, vertical polarization)ஒலிபரப்பாகும் என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒலிபரப்பு இருபிரிவுகளாக நடைபெறும் எனவும் முதல் ஒலிபரப்பு உள்ளுர் நேரம் காலை 6.30 – 9.00 மணிவரையும், மற்றய ஒலிபரப்பு மாலை 6.00 மணிதொடக்கம் 9.30 மணிவரையும் இடம்பெறும் எனவும் அறியமுடிகிறது. இதேவேளை ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்பு நிலையங்கள் அவற்றை மீள குறிப்பிட்ட நேரங்களில் ஒலிபரப்புச் செய்யும் எனவும் கிளிநொச்சி செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Monday, March 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.