Saturday, March 24, 2007

(மேலதிக இணைப்பு) மன்னாரில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு: 60 படையினர் பலி- 150 பேர் காயம்- 6 போராளிகள் வீரச்சாவு

[சனிக்கிழமை, 24 மார்ச் 2007] மன்னார் - மடு நோக்கிய வீதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முன்னகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் 15 மணிநேர தீவிர தாக்குதல் மூலம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 6 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மன்னார் - வவுனியா சாலையில் பிரமாணளங்குளம் மடு வீதியில் உள்ள பெரியதம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான் ஆகிய கிராமங்களை நோக்கி 120 பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியவாறு சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை 7.30 மணியளவில் பாரியளவில் முன்னகர்வை இரு முனைகளில் மேற்கொண்டனர். பின்தளங்களில் இருந்து ஆட்டிலறி, பல்குழல் எறிகணை செலுத்திகள், மோட்டார்கள் ஆகியவற்றின் தாக்குதல்களை மடு பகுதி வரை படையினர் நடத்திக்கொண்டு பிரமணாளங்குளம் முன்னரணில் இருந்து முன்னகர்வை மேற்கொண்டனர். படையினரின் முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் வழிமறித்து, பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை தொடர்ச்சியாக 15 மணிநேரம் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் படையினர் பாரிய இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். படையினர் தரப்பில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களினது உடல்களையும் காயமடைந்த படையினரையும் ஏனைய படையினர் உழவூர்திகளில் ஏற்றிக்கொண்டு பின்தங்களுக்கு சென்றனர். படையினரை அவர்களது நிலைக்களுக்கு விரட்டியடித்த போது, அவர்கள் தமது ஆயுதங்களையும் கைவிட்டு விட்டுச் சென்றனர். இவ் ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இம்முறியடிப்புச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 6 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவ் இராணுவ நடவடிக்கையினை அடுத்து மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளிலில் இருந்து இடம்பெயர்ந்த 2,000-க்கும் அதிகமான குடும்பங்கள் இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம், ஜெயபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.