[சனிக்கிழமை, 24 மார்ச் 2007] வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளுடன், மேலதிக பாதுகாப்பு வழங்க இணைந்து பஃவல் கவச வாகனங்களிலும் உந்துருளிகளிலும் வந்த சிறிலங்கா இராணுவத்தினர், இரு இளைஞர்களை பலாத்தகாரமாகக் கடத்திச் சென்றுள்ளனர். வண்ணார்பண்ணை, வயற்கரை வீதியைச் சேர்ந்த மாசிலாமணி அஜந்தன் (வயது 24) என்ற திருமணமான இளைஞரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் சேர்ந்து கடத்தியுள்ளனர். யாழ். இளையதம்பி வித்தியாலயத்தில் படிக்கும் விக்னேஸ்வரன் கிறிசாந்தன் (வயது 16) என்ற மாணவன், அஜந்தனிடம் வீட்டுப்பாடம் கேட்டுப் படிப்பதற்காக அங்கு வந்திருந்த வேளை, ஆயுததாரிகளும் இராணுவத்தினரும் அஜந்தனைக் கடத்த வந்ததால், 16 வயதான கிறிசாந்தனையும் பலாத்காரமாக இழுத்துச் சென்றுள்ளனர். யாழ். வங்கிச்சாவடி வீதியைச் சேர்ந்த நிர்மலநாதன் மயூரன் (வயது 19) அவரது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அங்கு அவருக்காக உந்துருளியில் காத்திருந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். யாழ். பெரிய அன்னை ஆலயத்தின் ஊழியராகப் பணியாற்றும் இந்த இளைஞரை நேற்று மதியம் 12 மணியளவில் கடத்திச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு மிருசுவில் வடக்கைச் சேர்ந்த மெய்கண்டதேவர் (வயது 47) என்பவரை ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த நிலையில் இவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Saturday, March 24, 2007
யாழில் வெள்ளை வான் குழுவினரோடு வந்த இராணுவத்தினரால் 3 இளைஞர்கள் கடத்தல்.
Saturday, March 24, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.