Thursday, March 08, 2007

கொழும்பில் தாண்டிக்குளம் கிறிஸ்தவ மதகுரு- 2 புதல்வர்கள்- 2 உதவியாளர்களை காணவில்லை.

[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007] வவுனியா தாண்டிக்குளம் தேவாலயத்தின் கிறிஸ்தவ மதகுருவான விக்ரர் போல் யோகராஜா (வயது 51), அவரது 2 புதல்வர்கள், 2 உதவியாளர்கள் ஆகியோர் மத நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக கொழும்பு சென்ற வேளை காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கொழும்பை அடைந்த பின்னர் காணாமல் போய் உள்ளதாக அவர்களது உறவினர்கள் வவுனியா செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறையிட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து கடந்த மாதம் பெப்ரவரி 28 ஆம் நாள் புறப்பட்ட அவர்கள் மார்ச் 1 ஆம் நாள் தாம் பாதுகாப்பாக கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளதாக உறவினர்களுக்கு அறிவித்திருந்தனர். ஆனால் அதன்பின்னர் அவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மதகுருவின் புதல்வர்களான யோகராஜா டானியல் (வயது 22) யோகராஜா டேவிட் (வயது 19) அவரின் உதவியாளரான ஜோசப் சுகந்தராஜா (வயது 20) ஆகியோரது விபரங்கள் அறியத்தரப்பட்டுள்ளன. மற்றைய உதவியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.