வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச சபையின் புதிய இரண்டு மாடிக்கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்று நண்பகல் 12.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கம்பராய் அம்மன் கோவிலில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய வாசலில் இருந்து ஊர்வலமாக பிரதேச சபைக்கு அழைத்து வரப்பட்டார்.
மேலும், இந்நிகழ்வில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவான், சுரேஸ் பிறேமச்சந்திரன், சி. சிறீதரன் மற்றும் வட மாகாண சபையின் அமைச்சர்களான பொ ஜங்கரநேசன், எஸ் குருகுலராசா, பி. டெனிஸ்ரன், ப. சத்தியலிங்கம் உட்பட பிரதேச சபைகளின் தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் அழைத்து வரப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் வட மாகாண சபையின் பிரதம செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.








0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.