Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Wednesday, September 18, 2013

தமிழ் மக்கள் கிள்ளுக் கீரைகள் அல்லர் என்பது நாளை மறுதினம் தெரியும்-சி.வி.விக் னேஸ்வரன்


தமிழ் மக்களை கிள்ளுக் கீரையாகப் பாவிக்க முடியும் என்றே அரசு எண்ணுகிறது போலும். இவ்வாறான எண்ணக்கருக் கொண்ட அரசுடன் அடிபணிந்து அவர்கள் சொல்வதற்கு தலையாட்டவே  ஈ.பி.டி.பியும் அங்கஜனும் அரச கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இது எமக்கு மன வருத்தத்தைத் தருகின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் உயர்திரு.சி.வி.விக் னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை குருநகரில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடமாகாண தேர்தலில் நாம் பங்குபற்றும் கடைசித் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இது. இது வரை காலமும் வடமாகாணத்தின் பல மூலை முடுக்குகளிலும் சென்று மக்களைக் கண்டு வந்துள்ளேன். மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு என்ற ஐந்து மாவட்டங்களிலும் எம் சகோதர சகோதரிகளுடன் அளவளாவியுள்ளேன்.

அவர்களின் பிரச்சினைகளையும் இதன் போது அறிந்துகொள்ள முடிந்தது. அவற்றுள் சிலவற்றை நாங்கள் எங்கள் பரப்புரைகளின் போது எடுத்தியம்பக் கூடியதாகவும் இருந்தது. பிரச்சினைகள் பலதரப்பட்டவை என்று அறிந்து கொண்டோம். எல்லோருடைய பிரச்சினைகளுக்கும் விடை காண்பதாயின் முதலில் பிரச்சினைகளின் தன்மையையும் ஆழத்தையும், அடிப்படைகளையும் ஆராய்ந்து அறியவேண்டும்.

அதன் பின்னரே அதன் தீர்ப்பு, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடமாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அல்லற்படும் எமது மக்களின் துயரங்களை அகற்றிட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருவூலம் எங்கள் மத்தியிலேயே உருவாகி உள்ளது.

தற்போது வடக்கு மாகாண நிர்வாகம் தலைகீழாக உள்ளது என்றே குறிப்பிட வேண்டும். நிர்வாக உறுப்பினர்களுக்கு மேலாக சில வேண்டத்தகாதவர்களது தலையீடு  காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாட்சி செய்து அனுபவம் இருக்கின்றதா என்றெல்லாம் அரச கட்சிகள் கேள்விகள் கேட்கின்றன. அப்படியானால் அதிகார மமதையில் அரைகுறை ஆட்சி நடத்தும் அரச கட்சிகள் எங்கிருந்து தமக்கான
அனு பவங்களைப் பெற்றுக் கொண்டனர்?

திட்ட மிட்ட திறமான ஆட்சியமைப்பை தரவல்லவர்களே கூட்டமைப்பு சார்பாக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

இவர்கள் அனைவருக்கும் உங்கள் ஏகோபித்த வாக்குகள் அமைதியான முறையில் தரப் படவேண்டும். ஆட்சி அதிகாரத்தை கூட்டமைப்புக்கு மாற்ற நீங்கள் ஆவன செய்ய வேண்டும்.

எம்முடன் தேர்தலில் நின்று தோற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்பட விடாமல் பெருந்தன்மையுடன் நாங்கள் பதவியேற்க எம்மாலான சகல பணிகளிலும் ஈடுபட வேண்டும்.

பழிவாங்கல் என்பதில் எந்தக் காரணம் கொண்டும் மக்கள் ஈடுபடலாகாது. இது தவராசா அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இதே போன்றதொரு பெருந்தன்மையை நான் எதிர் பார்க்கின்றேன்.

ஆனால் அரச தரப்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் கூட பலத்த மயக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களே தமது கட்சியிலிருந்து முதலமைச்சரை தேர்ந் தெடுப்பார்கள் என்று தவராசா கூறுகிறார்.

அவரின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ வெளியில் இருந்தே முதலமைச்சர் கொண்டு வரப்படுவார் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இவற்றை விட ஜனாதிபதியின் சகோதரரில் ஒருவர் கூறுகிறார் ஜனாதிபதியே முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார் என்று.

இவற்றுள் அங்கஜன் எதற்குள் அடக்கப்படுவாரோயாம் அறியோம். ஆனால், இவற்றை யெல்லாம்லாம் விட களத்தில் வன் முறையைத் தூண்டிவிட்டு களவாக ஒருவரை சபை முதல் வராக்க நடவடிக்கைகளை இராணுவம் எடுத்து வருகின்றது என்பது நாம் அறிந்த உண்மை.

செய்வதெல்லாம் செய்துவிட்டு தாங்கள் பரம சாதுக்கள் என்று பறைசாற்றும் எங்கள் இராணுவத்தினரால் தேர்தல் நாளன்று என்னென்ன பிரச்சினை வருமோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

தேசியக் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தும் கட்சிகளின் தலைமைத்துவங்கள் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனோநிலையையே பிரதிபலிக்கின்றன.
ஒரே நாடு, ஒரே மக்கள் என்று பெரும் பான்மையினர் கூறும் போது, அங்கு ஒரே மக்கள் என்பது சிங்கள மக்களையே குறிக்கின்றது. அதாவது இலங்கை நாட்டினுள் எங்கே ஒரே மக்கள் இருக்கின்றார்கள்?

தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலாயர்கள், பறங்கியர் என்று பல விதமான மக்கள் வாழும் நாடு இது. நாம் யாவரும் ஒரே தாய் மக்கள் என்று கூறும் போது வேறுவேறு மொழிகளைப் பேசும், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும், வெவ்வேறு கலாசார விழுமியங்களை கைக்கொள்ளும் மக்களை ஒரே நாட்டு மக்கள் என்று கூறலாம்.

ஆனால், ஒரே மக்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அந்த அடிப்படையில் தான் வடக்கை இரண்டு வருடங்களில் பெளத்தமயமாக்கத் திட்டமிருப்பதாக பொதுபல சேனா நேற்று அறிவித்துள்ளது.

பெளத்த மயமாக்கல் என்பது சிங்கள மயமாக்கல் என்பதே. பெரும்பான்மையின தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சிகளில் உத்தேசம் இதுவே என்பது தற்போது தெரியவருகிறது. எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் தமிழர்களுக்கு எவ்வகையான தீர்வை தாம் அளிக்க தயார் என்று முன் வைத்ததில்லை.

எங்கள் தேர்தல் அறிக்கையை பிரிவினைக்கு வித்திடும் ஆவணம் என்று கூறும் அரசியல் கட்சிகள், எந்தவிதத்தில் அது அவ்வாறான கருத்தைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிக் கூற மறுக்கின்றன.

தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையில் ஒரே நாட்டினுள் இருந்து தம்மைத் தாமே ஆளும் உரித்தை கோருகின்றார்கள் என்று கூறியதை இவர்கள் பிரிவினை என்று கருதுகின்றார்கள்.

பிரிபடாத நாட்டில் நம்மை நாம் ஆளக்கூடாது, அதே நேரத்தில் எந்தவிதத் தீர்வை அரசு முன்னிறுத்துகிறது என்பதும் கூறப்படாது என்றால் அதன் அர்த்தம் என்ன? இவர்கள் ஒருபோதும் எமக்கு எந்த விதத்திலும் தீர்வைத் தர தயாரில்லை என்பதே வெளிப்படுகிறது.
எமது அரசு, ஒரேநாடு, ஒரே மக்கள் என்பதன் அர்த்தமும் புரிந்துவிட்டது. 

ஒரு மரத்தினைச் சுற்றி செல்லும் கொடி போலவே சிறுபான்மையினர் இருக்க வேண்டும். தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள அவர்கள் அருகதை அற்றவர்கள் என்று சரத் பொன்சேகாவும் காலஞ்சென்ற ஜனாதிபதி விஜேதுங்கவும் கூறியனவும் புரிந்துவிட்டது.

அதாவது வடமாகாணம் சிங்கள மொழியிலேயே அரசகரு மங்கள் ஆற்றவேண்டும். வட மாகாணம் மத்திய அரசு கூறும் விதத்திலேயே வழி நடத்தப்பட வேண்டும்.
அவர்கள் சுதந்திரமாக எதையும் செய்யலாகாது. ஏனென்றால் அவர்கள் வெறும் சிறுபான்மையினர். அதனால் தான் எமக்கு காணி உரிமை தேவையில்லை. பொலிஸ் அதிகாரங்கள் தேவை யில்லை என்று கூறுகிறார்கள். 

அதனால் தான் ஆளுநர் ஊடாக எம்மைக் கட்டுப்படுத்த முடியும் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒரு வர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அன்புள்ள சகோதர, சகோதரரிகளே 

இத்தனை உயிர்ச் சேதம், பொருள் சேதம், மனவேதனை, உடல் பாதிப்பு, வறுமை போன்றவற்றை நாம் அனுபவித்து இருக்கிறோம். இவ்வாறான துன்ப துயரங்களுக்கு மத்தியில் இவர்கள் கூறும் கதைகள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வாகி விடுமா? அரசு எம்மைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது?

எந்தநாளும் தமிழ் மக்களை கிள்ளுக்கீரையாகப் பாவிக்க முடியும் என்றே எண்ணுகிறது போலும். இவ்வாறான எண்ணக் கருக்கொண்ட அரசுடன் அடிபணிந்து அவர்கள்  சொல் வதற்கு தலையாட்டவே  ஈ.பி.டி. பியும் அங்கஜனும் அரச கட்சி யின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இது எம க்கு மனவருத்தத்தைத் தருகின்றது.

இவற்றுக் கெல்லம் உங்கள் கைகளில் மருந்துண்டு. 21 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் அமோக வெற்றியை எமக்கு அளிப்பதே அந்த மருந்து. நீங்கள் காட்டும் பேராதரவு அரசை நிலை குலையச் செய்ய வேண்டும். வெளிநாடுகள் அரசை குறை கூறக்கூடியதாக அமைய வேண் டும். உண்மையில் அரசு சார்பான கட்சிகளுக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்.

எமது ஏகோபித்த ஆதரவின் மூலம் அரசை வீழ்ச்சி அடையச் செய்து அவர்களின் புழுகு வார்த்தைகளை கேள்விக் குறியாக்க வேண்டும். பல நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு பயங் கரவாதம் என்ற போர்வையில் தமிழின அழிப்பை மேற்கொண்டுள்ளது என்ற உண்மை உங்கள் வாக்களிப்பின் மறுநாள் உறுதிப்படுத்தப்படும்.

நாளை மறு தினம் நீங்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிக்கச் செல்வதை பார்த்து அரசு ஆச்சரியப்பட வேண்டும்.  உங்கள் ஏகோபித்த ஆதரவு தமிழ் மக்களின் விடிவு காலமாக 22 ஆம் திகதி மலரும் அவர்கள் சுதந்திரமாக எதையும் செய்யலாகாது. ஏனென்றால் அவர்கள் வெறும் சிறுபான்மையினர். அதனால் தான் எமக்கு காணி உரிமை தேவையில்லை. 

பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்று கூறுகிறார்கள். அதனால் தான் ஆளுநர் ஊடாக எம்மைக் கட்டுப்படுத்த முடியும் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒரு வர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.