Wednesday, July 31, 2013

நாடு சுடுகாடாகும் நிலை வந்தால் பிணமெரிக்கும் வேலை சம்பிக்க ரணவக்கவுக்கே!


விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆனால் தமிழருக்கு கண்ணீரும் சுடுகாடும் உறுதியாகும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உருமயின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க எச்சரித்திருப்பது எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பிணமெரிக்கும் பொறுப்பை பெற்றுக்கொள்வதற்கான திட்டமா என ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தவிசாளரும் ஊவாமாகாண சபை உறுப்பினருமான கே.வேலாயுதம் வினா எழுப்பியுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவின் கருத்து குறித்து கே.வேலாயுதம் இன்று (31) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
வட, கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தக்கூடாது நடாத்தினால் பாரிய விளைவுகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என வாய்கிழிய வீராப்பு பேசிய சம்பிக்க இந்திய வெளியுறவு ஆலோசகர் சிவசங்கர் மேனனது வருகையின் பின்னர் வாயடைத்து வெட்கமற்று இருக்கின்ற நிலையை நாடுஅறியும்.
இனவாதத்தின் ஊடாக தமிழ் மக்களை அச்சுறுத்தி வட மாகாணத்தையும் அபகரித்துக்கொள்கின்ற செயற்பாட்டில் சம்பிக்க இறங்கியிருப்பது அவர்களது கொடூரமான நாட்டை முன்னேரச் செல்லவிடாது பேரினவாதத்தினூடாக இந்தநாட்டின் சமாதானத்தை சீர்குலைத்து நாட்டை பிளவுபடுத்த தூண்டுகின்ற பிரிவினைவாத செயலாகவே கருதுகின்றோம்.
எனவே வடக்கை ஏற்கனவே அவர் சார்ந்த அரசாங்கம் சுடுகாடாக்கி இருப்பது உலகே அறிந்த விடயம். இவ்விடயம் சம்பந்தமாக உலக நாடுகள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது அரசு திண்டாடிக் கொண்டிருப்பதையும் உலகம் அறியும்.
இந்நிலையில் மீண்டும் ஜனநாயக ரீதியில் தமிழ் மக்கள் வடக்கு தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்ற செயலை கொச்சைப்படுத்தி தமிழ் மக்களை அச்சுறுத்தி அவர்களது வாக்குகளை சூரையாடி வடக்கை மீண்டும் சுடுகாடாக்கி தமிழ் மக்களை அச்சுறுத்துவதன் ஊடாக வடக்குத் தேர்தலில் பேரினவாத சக்தியில் வெற்றிபெற முடியாது.
இதனை தமிழ் மக்கள் நிச்சயம் பரைசாற்றுவார்கள் என்பதோடு எதிர்காலத்தில் நாட்டை சுடுகாடாக்குகின்ற நிலையினை பேரினவாத சக்திகள் முன்னெடுக்குமேயானால் அங்கு பிணமெரிக்கின்ற வேலை சம்பிக்கவுக்கே உறுதிசெய்யப்படுமென குறிப்பிட விரும்புகின்றேன் என கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.