Saturday, May 25, 2013

பிரபல பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், கடந்த அறுபது ஆண்டுகளாக பின்னணி பாடகர்களில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு நாளை (26.05.13) நடைபெறுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.