Thursday, April 18, 2013

பாஸ்டன் குண்டு வெடிப்பில் அவிழும் மர்மம் - குற்றவாளியின் வீடியோ ஆதாரம் சிக்கியது


திங்கட்கிழமை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப் போட்டியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் மூவர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.

இக்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய இரண்டு நபரகளின் படங்கள் புலனாய்வுத் துறையினரிடம் சிக்கியுள்ளன. இதில் அவர்கள் ஓட்டப் போட்டி வீரர்கள் போலவே உடை அணிந்து கையில் சந்தேகத்துக்குரிய பைகளுடன் மாரத்தான் போட்டி முடிவுக் கோட்டில் இருப்பது தென்பட்டுள்ளது.

எனினும் FBI இனர் இந்த புகைப்பட ஆதாரங்களை வெளிப்படுத்த மறுத்து விட்டனர். இந்த முக்கிய ஆதாரம் லோர்ட் மற்றும் டேய்லர் திணைக்களக் கடையின் பாதுகாப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது.

யுத்தக் களத்தில் பாவிக்கப் படுவது போல கறுப்பு நிறப் பைகளில் ப்ரஷர் குக்கரில் இடப்பட்டிருந்த குண்டுகள் கிளைமோர் போல் செயற்படும் விதத்தில் ரிமோட்டினால் வெடிக்க வைக்கப் பட்டதாக இதுவரை வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது. கைதான நபர் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. இக்குண்டு வெடிப்பில் 8 வயதுச் சிறுவனும், 29 வயதுப் பெண்மணியும், பாஸ்டன் கிராட் பல்கலைக்கழக மாணவனும் பலியாகியினர். 183 பேர் காயமடைந்ததுடன் இதில் 23 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதைவிடக் காயமடைந்தவர்களில் பலர் ஊனமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.