Tuesday, March 19, 2013

தேசிய தலைவர் பாதையில் இன்றைய தமிழக மாணவர்கள்.


விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் சிறீலங்கா அரசு அதன் படைகளைக் கொண்டு, தாயகப் பகுதிகளில் அடாவடித்தனங்களை கட்டவிழ்துள்ள நிலையில், தமிழகத்தில் நிலை கொண்டுள்ள தேசிய தலைவர்கள் அவர்கள் அகிம்சைவாதி காந்தி பிறந்த மண்ணில் அதிகாரவர்க்கத்தினர் விடுதலைப் புலிகளின் செயற்பாடகளை முடக்கும் நடவடிக்கையின் ஒன்றாக அவர்களின் தொலைத் தொடர்பு சாதனங்களை பறிமுதல் செய்ததையடுத்து தலைவர் அவர்கள், உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை சென்னையில் 1986 இல் நீரும் அருந்தாது தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

தலைவர்கள் அவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தையடத்து தமிழகம் எங்கும் பரபரப்பு ஏற்பட்டது, மக்களின் ஆதரவும் பல்கிப்பெருகின. என்ன கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தாரோ அந்தக் கோரிக்கை தமிழக மக்களின் துணையுடன் இரண்டாவது நாள் நிறைவேறியது.

தமிழர்க்கு விரோதமாக இந்திய – சிறீலங்கா ஒப்பந்த்தினூடாக அமைதிப்படை என்ற போர்வையில் சிறீலங்கா வந்த இந்தியப்படைகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருதற்காகவும், தமிழ் இனத்தின் விடுதலைக்காகவும் 1987 ஆம் ஆண்டு தியாகி திலீபன் தனது உயிரை தாயக விடுதலைக்காக அர்ப்பணித்து, உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், இந்திய அரசு எவ்விதமான சாதகமான சமிஞ்சைகளையும் வெளிப்படுத்தவில்லை. தியாகி திலீபனின் ஆத்மா உடலைவிட்டு பிரிந்தது.

அதேநேரத்தில், இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் நடாத்திய போதும், தமிழக மக்களின் உணர்வலைகள் கிளர்ந்தெழுந்தது மத்திய அரசுக்கு எதிராக கடும் போக்காக தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டினர். ஆனால், இந்திய அரசாங்கம் எதனையும் தடுத்து நிறுத்தவில்லை. அழிவுகளையும், சேதங்களையு ஏற்படுத்தியதுதான் வரலாறு.


இவற்றுக்கெல்லாம் பதிலடியாகத்தான் எமது தேசிய தலைவர்கள் அவர்கள், போராட்ட யுத்திகளையும், அரசியல் ரீதியான தொலைநோக்கு சிந்தனைகளையும் மிகவும் மதிநுட்பமாக வகுத்து தமிழர்களின் போராட்டத்தை விரிவுபடுத்தினார். சிறீலங்காப் படைகள் மாத்திரமல்ல, இந்தியப் படைகளினதும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்காக தலைவர் போராட்டத்தை உக்கிரமடைய வைத்தார்.

எனினும், சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலகத்தின் ஆதரவுடன் ஈழத்தில் பாரிய மனித குலத்திற்கு எதிரான கொடூரச் செயலை அரங்கேற்றி இலட்சக்கணக்கான பொதுமக்களையும், விடுதலைப் போராளிகளையும் கொன்று குவித்துள்ளன.

சர்வதேசம், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான உதவி என்ற போர்வையில் மக்கள் விடுதலை அமைப்பை சிதைத்துள்ளது. ஆனாலும், சிங்களத்தினால் சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட உறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்ட நிலையில், தமிழர்களின் இலட்சியங்களை வென்றெடுப்பதற்கான வாய்ப்பு இன்னும் கைவிடப்படவில்லை என்பதை எமது தொப்புள்கொடி உறவுகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


மாணவர்களின் எழுச்சியான போராட்டங்களை மழுங்கடிக்க சில அரசியல் கட்சிகள் முனைந்து, பல எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், மாணவர்கள் எடுத்த இலட்சியப் போக்கு தொடராகவே உள்ளது. ஒரு இனம் அழிக்கப்பட்டுள்ளது, கணக்கில்லாது மனித உயிர்களை சிங்கள இனவெறிபிடித்த படைகளினால் கொன்றொழிக்கப்பட்டுள்ளன, அவற்றுக்கான நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் அறவழியிலான போராட்டத்தையும் நசுக்க சில தீய சக்திகள் முனைப்புடன் செயற்படுகின்றன.

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது, தமிழனாகவுள்ள சுப்பிரமணிய சுவாமி சர்வதேச சட்டங்களை மீறியுள்ள கொடூரமான ஒரு படைகளைக் காப்பாற்றவும், இனரீதியான பாகுபாடுகளைக் காட்டுகின்ற அரசாங்கத்திற்காக குரல் கொடுக்கின்றனார். தமிழகத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தியின் கொலை சம்பவங்களை வைத்துக் கொண்டு சுவாமி  தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றார்.  உண்மைகள் என்றும் அழியாது, சுவாமிக்கு ராஜீவ் காந்தியை பிடிக்காமல் இச்செயலுக்கு துணைபோயிருக்கலாம். அதற்காக ஒரு இனத்தில் விடுதலைக்காக சர்வதேச நாடுகள் பச்சைக் கொடி காட்ட எத்தனிக்கும் வேளையில் முரண்டுபிடிப்பது இது தக்கதருணமல்ல.


ஈழத்தமிழர்க்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அயல்நாடான இந்தியா முட்டுக்கட்டையாக இருப்பதாக சர்வதேச நாடுகளே வெளிப்படையாக தெரிவித்துவரும் நிலையில், தொடர்ந்து அவ்வாறான குற்றச் செயல்களில் ஏன் ஈடுபட வேண்டும். 

கட்சி வேறுபாடுகளை களைந்து கொடிய சிங்களத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானங்களை நிறைவேற்றிய தற்போதைய தமிழக அரசு, மாணவர்களின் போராட்டத்தில் தலையிடுவது முல்வரின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டியுள்ளது. சிறீலங்கா மீது பொருளாதார தடை கொண்டுவர வேண்டும், சிறீலங்கா படைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவது தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கும் முதல்வர், மாணவர்களின் போராட்டத்தை தடை செய்யும் வகையில் கல்லூரிகளை இழுத்துச் மூட வைத்ததன் காரணம்தான் என்ன? 

சிறீலங்கா உட்பட மேற்குலக நாடுகள் தெரிவிப்பது போன்று ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை வெறும் அரசியலுக்காக பயன்படுத்துகின்றார்கள் என்ற கருத்து முதல்வரின் செயற்பாட்டினால் உறுதியாகிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சிறீலங்கா அரசை கண்டித்தும் மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் உணவுத் தவிர்ப்புப் போராட்டமானது எவ்வித அரசியல் கலப்பும் இல்லை என மாணவர்கள் அறிவித்ததை தற்போதைய முதல்வர் பிழையாக கருதி இந்த முடிவை எடுத்தாரா? 

மாணவர்களின் போராட்டத்தை வலுவடையச் செய்வதற்காக தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கிவிட்டார்கள். எனவே இது  மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. மக்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் செவிமடுக்காதுவிடத்து, அதன் விளைவு விபரீதமான முடிவும் என்பது மட்டும் உறுதியாக கூறமுடியும்.

எமது தேசிய தலைவர் அவர்கள், கூறியது போன்று ஈழத்தமிழர்களின் போராட்டமானது இந்திய அரசுக்கு எதிரானதல்ல, எமது மக்களின் பாதுகாப்பக்கும், தமிழர்களின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்குமான போராட்டமாகும் எனத் தெளிவாக உரைத்துள்ளார். அவ்வாறு, இன்று தமிழகத்தில் இடம்பெறும் மாணவர்களின் போராட்டமானது, ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஆரம்பிக்கப்ட்டுள்ளதே தவிர இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதல்ல.

ஈழத்தில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதால், உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.  தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என சிங்களத்தின் செல்லப் பிள்ளையாக இருந்து செயற்படும் நயவஞ்சகக் கூட்டத்தினால் ஈழத்தில் அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்க இடையூறுகளை மேற்கொள்கின்றனர். 

எவ்வாறாயினும், தாயகத்தில் இடம்பெற்ற கொடூரங்களை உலகின் முன்கொண்டுவருவதற்காக புலம்பெயர்ந்து வாழ் உறவுகள் அயராது உழைக்கின்றனர். இவர்களின் விடாமுயற்சியானது, இன்று உலகின் கண்களைத் திறந்துள்ளது. இவற்றுக்கு துணையாக தமிழக மாணவர்களின் உணர்வுத் தவிர்ப்புப் போராட்டம் உரமுட்டும் அதே சமயத்தில், மாணவர்களின் போராட்டத்தின் வலிமையினால், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எமது தேசிய தலைவர்கள் அவர்கள் தொடங்கிய பயணத்தை இன்று தமிழக மாணர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் வேளையில், அவர்களின் போராட்டத்திற்கு தோள்கொடுப்பதுடன், தேவையான அனைத்து உதவிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொண்டு, அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் களைய வேண்டும். இதற்கான ஈழத்தமிழர்கள் என்னும் நன்றியுடையவர்களாக இருப்பர்.

கிழக்கில் இருந்து எழுவான்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.