Monday, October 08, 2012

இலங்கை அரசை பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றது ஐ.நா.

மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர் தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை அரசு மூடியதற்கு ஐ.நா வரவேற்று அறிக்கைவிட்டது அறிந்ததே.
 
ஆனால் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து சீனியாமோட்டை மற்றும் சூரிபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.

அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரியப்படுத்தினர்.இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலர் தாம் இலங்கையரசை பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.