Sunday, July 29, 2012

சீனா, ரஷ்யா உட்பட இலங்கையின் நான்கு நட்பு நாடுகள் ஐநா உறுப்புரிமையை இழந்தன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நாடுகளுள் நான்கு நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
சுழற்சி முறையில் வழங்கப்படுகின்ற இந்த உறுப்புரிமை, குறித்த நாடுகளிடம் இருந்து மீளப்பெறப்பட்டு மேலும் நான்கு நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன.

 இதன்படி, இலங்கைக்கு பெரிதும் ஆதரவை வெளியிட்டு வந்த சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்த மாநாட்டில் வாக்களிக்க முடியாது அதேபோன்று சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளும் உறுப்புரிமையை இழந்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.