Thursday, June 28, 2012

சுயவிருப்பின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தயை நாம் கண்காணிப்போம்: மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளர் மனோ கணேசன்

சிறை வாழ்கை வாழும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு, அவர்களது சுயவிருப்பின் அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தை நாம் கண்காணிப்போம். தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள், விசாரணை மட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆகிய மூன்று பிரிவினரும், சுயவிருப்பின் அடிப்படைகளில் இந்த புனர்வாழ்வு திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும் என மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
அரசின் புதிய நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு உடனடியாக கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
வவுனியா, அனுராதபுரம், மன்னார் ஆகிய இடங்களில் விசேட நீதிமன்றங்கள் அமைத்து கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்த போகிறோம் என்று அரசு சொன்னதை நாம் முழுமையாக நிராகரித்திருந்தோம். இது காலம் கடத்தும் செயல் என்பது எமக்கு வரலாற்று ரீதியாக தெரியும். இன்று அந்த விசேட நீதி மன்ற திட்டத்தை அரசு கைவிட்டுள்ளதாக தெரிகிறது. இது வரவேற்க தக்கது. இது எமது உறுதியான எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி.

அதேவேளையில், எமது நிலைப்பாடு, அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்பதாகும். இதில் எந்த வித மாற்றமும் கிடையாது.

னால் கைதிகளின் சுய விருப்பத்தின் பேரில், அவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு உட்பட்ட கால வரையறையுடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் அவர்களது குடும்பங்களுடன் சேர்க்கப்படுவார்கள் என்றால் அதை நான் ஆட்சேபிக்கப்போவதில்லை.

இந்த புனர்வாழ்வு திட்டத்தை மக்கள் கண்காணிப்பு குழு கண்காணிக்கும். நாடு முழுக்க வாழும் அரசியால் கைதிகளின் குடும்ப அங்கத்தவர்கள் இது தொடர்பில் உடனடியாக எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தும்படி கேட்டுகொள்கிறேன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.