Saturday, March 03, 2012

ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் நீதியின் குரல் வெல்லட்டும் - ஜெனீவாவில் தமிழர்கள் திரள வேண்டும்! வைகோ

ஈழத் தமிழினத்தை படுகொலை செய்த சிங்களவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஜெனீவாவில் தமிழர்கள் திரள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.
தமிழ் மக்கள் ஜெனீவாவில் பேரணி நடத்துகிறார்கள். தாயகம் விடுதலைக்காக மாவீரர்கள் சிந்திய இரத்தம், உயிருக்கு பூபாளம் இசைக்கட்டும், ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் நீதியின் குரல் வெல்லட்டும், ஜெனீவா நகரில் பொங்குமாங் கடலாய் தமிழர் திரண்டு அகிலத்தின் செவியெல்லாம் கேட்க எழுப்ப இருக்கும் விடியல் அது. தமிழினப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐ.நா. மன்றம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கள சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழர் தாயத்தில் இருந்து சிங்கள இராணுவமும், பொலிஸாரும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடக்கிறது.
எட்டுத் திசைகளில் இருந்தும் ஈழத்திற்கு கட்டியம் கூற ஜெனீவாவிற்க்கு செல்லுங்கள், ஜெனீவாவில் வீர முழக்கம் மனித குலத்தின் மனசாட்சி கதவை ஓங்கி தட்டப் போகிறது.

துடிக்க துடிக்க தமிழினத்தை படுகொலை செய்த சிங்களவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம். சுதந்திர தமிழ் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.