Monday, March 05, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த விடோம்.!

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவோமென அரச தரப்பினர் அமெரிக்காவில் தெரிவிக்கலாம். ஆனால் இலங்கையில் நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

ஹிலாரி கிளின்டனின் தேவைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவை அமர்த்த அரசாங்கம் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தமை தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கும்போதே டாக்டர் குணதாஸ அமர÷சகர இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இக் கருத்தை அமெரிக்காவில் வெளியிடலாம். அதற்கு தடையில்லை. ஆனால் இலங்கையில் விளையாட முடியாது. ஒரு போதும் அதனை நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோம். எமது மக்களின் தேவைக்காகவா நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது? இல்லையே.

ஹிலாரி கிளிண்டனின் தேவைக்காகவே இது அமைக்கப்பட்டது. இவ் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதனை நான் நிராகரித்தேன். ஏனென்றால் இக் குழுவில் அங்கம் வகித்தோரும் தகுதியற்றவர்கள். பக்கச் சார்பானவர்கள்.

அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழு வரையறைகளை மீறி இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதாகவும் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஹிலாரியின் தேவைக்காக ஆணைக் குழு நியமித்து இலங்கை அரசாங்கம் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.