Tuesday, March 13, 2012

தமிழ் கூட்டமைப்பை துண்டாடுகின்றது அரசு! சம்பந்தன் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பை துண்டாடுவதற்கு அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கி உள்ள விசேட பேட்டி ஒன்றிலேயே இக்குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கின்றார்.

கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அரசு மிக நீண்ட காலமாகவே முயன்று வருகின்றது, தமிழ் கூட்டமைப்பின் சிங்கள எம்.பியை அபகரித்து விட்டது, பொதுமக்கள் ஏராளமானோரின் எதிர்ப்புக்கு மத்தியில்தான் சிங்கள எம்.பியை நான் வேட்பாளராக்கினேன், சிங்கள எம்.பியும் வெற்றி பெற்றார், ஆனால் அதன் அச்சிங்கள எம்.பியை அரசு அபகரித்து விட்டது, நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகள் அனைத்தையுமே அரசு துண்டாடி வருகின்றது, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகள் ஏற்கனவே அரசினால் துண்டாடப்பட்டு விட்டன, கூட்டமைப்பையும் அரசு உடைக்க முயற்சிக்கின்றது என்பதில் எனக்கு சிறிய அளவில்கூட சந்தேகம் கிடையாது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.