Sunday, March 18, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மத்திய அரசுக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்த வேண்டும்!

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் விடுத்துள்ள அறிக்கையில், ’’ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.

இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா என்று எதிர்பார்த்தால் சாக்குபோக்கு சொல்லி வருகிறது. இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று லட்சிய தி.மு.க. சார்பில் வலியுறுத்தி போராடுவோம்.

இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்தின் சார்பில் இதனை வலியுறுத்தி ஒரு அழுத்தமான போராட்ட குரலை எழுப்பி, மத்திய அரசுக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்த வேண்டும்.

சேர்ந்த மத்திய மந்திரிகளும், எம்.பி.க்களும் மத்திய அரசை வலியுறுத்தி தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.       

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.