Sunday, March 04, 2012

தலைவன் அழைப்பு விடுக்கின்றான்! மாவீரர்கள் வரவேற்கக் காத்துள்ளார்கள்!! தமிழர்களே படைதிரட்டி வாருங்கள் ஜெனீவா நோக்கி!

“பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்ந்த போதும் எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாபநிலைக்கு - இந்த மேசமான நிலைமைக்குக் காரணம்.

எனவே உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக் கொள்கின்றேன்…” என்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எம்மை நோக்கி தமிழினம் இடர்களை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலம் அன்போடும் உரிமையோடும் அழைப்பு விடுத்தவண்ணமுள்ளார்.

651வது ஆளாக விண்ணுலகில் இருந்து மலரப்போகும் தமிழீழத்தை பார்த்து மகிழ்வேன் என்று கூறிய திலீபன் அண்ணாவைப் போன்று தாயக மீட்புப் போரில் வீரச்சாவடைந்த சுமார் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களும் மலரப்போகும் தமிழீழத்தை கண்ணாரக் காணத் தவமிருக்கின்றார்கள்.

இன்றைய சுழ்நிலையில் தமிழீழத்தில் ஒரு பிடி மண்ணேனும் எமக்கில்லை என்றான போதும் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்ற அசையாத நம்பிக்கையுடன் ஜெனீவா முன்றலிற்கு திரண்டு வரும் எம்மை வரவேற்க இந்த மாவீரர்கள் காத்திருக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் பயணிக்கும் எம் ஒவ்வொருவரிற்கும் மாவீரர்கள் ஆன்ம பலம் கொடுத்து நிற்கின்றார்கள். அவர்களது கனவான தமிழீழத்தை வென்றாக வேண்டும். அதற்கு நாம் ஒன்றாக வேண்டும்.

அலை அலையாக நீங்கள் ஜெனீவா நோக்கி வாருங்கள். உங்கள் வரவை எதிர்பார்த்திருக்கும் மாவீரர்களின் ஆன்மாவிற்கு சற்றேனும் ஆறுதலளிக்கும் விடையமாக இந்த ஜெனீவா நோக்கிய நீதிக்கான நடை பயணத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

சிங்களத்திற்கு எதிராக பிரேரனை சமர்பிக்கப் போவதாக சில நாடுகள் பூச்சாண்டி காட்டிநிற்க தமது ஆதரவு சிங்களதேசத்திற்கு எப்போதும் உண்டு என சில நாடுகள் உறுதிபூண்டு நிற்க இன்னும் பல நாடுகளை தமக்கு சாதகமாக திருப்பிவிட வேண்டும் என்று சிங்களம் ஓயாது சுற்றிச் சுழன்று வருகின்றது.

இத்தருணத்தில் சிங்களத்தால் தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்ற விதி மீறல்களையும் பலமாக எடுத்துக் கூறுவதற்கு ஜெனீவா முன்றலில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடுவது அவசியமாகும்.

தமக்குப் பின்னால் வரும் போராளிகள் தமது ஆயுதத்தை மட்டுமல்ல தமது தமிழீழ இலட்சியத்தையும் சுமந்து போராட முன்வருவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் இறுதி மூச்சை விட்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையினை நாம் நிறைவேற்ற இதுவரை தவறியிருந்தாலும் இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் அணிதிரண்டு மாவீரர்களின் ஆத்மாவை ஆனந்தப்படுத்துவோம்.

“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.