Monday, March 05, 2012

இராணுவப் பாணியில் அமைச்சர்கள்! போர்க்களமாகும் இலங்கை!!

உலகிலேயே மிகவும் பலம் பொருந்திய விடுதலை அமைப்பான விடுதலை புலிகளுடன் 30 வருடங்கள் தொடர்ச்சியாக போராடி கணிசமான படைத்துறை அனுபவத்தை ஸ்ரீலங்கா படைத்துறை இயந்திரமானது கொண்டுள்ளது என்பது தெரிந்ததே.

எனினும் இதன் பரிமாணங்களை, விளைவுகளை படைத்துறை சார்ந்தவர்களுக்கே அதிகம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். போர்க் காலங்களின் போதே மரபுசார் போர் தகைமையினை அதீத ஆற்றலுடன் வளர்த்துக் கொள்ளவும், ஒவ்வொரு துறையிலும் தொழில்முறை அறிவு எல்லைகளை விரிவுபடுத்தவும் தனது படையில் உயரதிகாரிகளைத் தெரிவு செய்து அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருடக் கணக்கில் சிறப்புப் பயிற்சிகளையும், கல்வியினையும் கொடுத்து பின்பு அவர்களை வைத்து ஏனையவர்களுக்கு அதே தரத்துடன் துறைசார் பயிற்சிகளை புகுத்தியது ஸ்ரீலங்கா. இந்த அரசானது இதற்கு எத்தனையோ கோடிகளை கொட்டியது என்பதற்கு ஒவ்வொரு வருட வரவு செலவுத் திட்டமும் அறிக்கைகள் இதற்கு சான்று பகரும்.

முகாமைத்துவம், கற்பித்தல் முறைமை, தொழில்நுட்ப உபகரணங்களை செயற்றிறனுடன் கையாளுதல், சர்வதேச அணுகுமுறைகள் , பொறிமுறைகள், மாறுபட்ட சூழ்நிலையில் நிலைமைகளை கையாளுதல் எனப் பல்வேறுபட்ட விடயங்கள் இதனுள் அடங்கும்.

இதன்முலம் பல தீர்வுச் சிக்கல்களுக்கு விடை இலகுவாகக் காணப்படும் அதேவேளை, எதிர்த் தரப்புக்குப் புதிய அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்புண்டு. இது இலங்கை மண்ணில் எத்தனையோ தடவை நடந்து முடிந்துள்ளது.

மற்றும் போரை நடத்துவதற்காகப் படைத்துறையை எவ்வளவு வலுப்படுத்த முடியுமோ அவற்றின் சட்டத்தை எல்லாம் மாற்றித் தற்போது பாரிய இராணுவ இயந்திரமாக மாற்றியுள்ளது அரசு

தற்போதைய யுத்தம் முடிவுற்ற சூழலிலும் யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதை விட்டு விட்டு படையினரின் மனோபலத்தைக் குறைக்காது அவர்களுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை அண்மைக் காலமாக நடைபெறுவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.

இதன்முலம்உதாரணமாக இராணுவ பொறியியல் சேவை ரெஜிமென்ட் தனியார் கட்டுமான வேலைகளை பொறுப்பெடுத்துச் செய்வதும், தொழில் நுட்பப் பகுதியை மக்கள் பொதுச் சேவைகள் பகுதியுடன் இணைத்திருப்பதும், அபிமன்சல 1, அபிமன்சல 2 திட்டங்கள், நீர்ப்பாசன திட்டம், பலா மரக்கன்று நடும் திட்டம் போன்றவை அடங்கும். இதனை படைத்தரப்பு மிகவும் திட்டமிட்ட முறையில் காத்திரமாகச் செய்து வருகின்றது.

தற்போதைய உண்மை நிலையின்படி போரின் பின்னரான இக்காலத்தில் படைத்துறையின் சில பிரிவுகள் முற்றாகச் செயற்படாமல் உள்ளது.

இதன்முலம்இவற்றை வலுப்படுத்தவும், சீராக இயக்கவுமே திட்டங்கள், யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்காகவே படைத்துறையில் மாற்றங்களை செய்கிறார்களே தவிர வடக்குக் கிழக்கில் படைக் குறைப்பை ஏற்படுத்த அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதுதவிர ஸ்ரீலங்காப் படைத்துறையின் மூத்த அதிகாரிகள் யாவருமே நாட்டின் அமைச்சர்களை விட நிலைமைகளை அவதானிப்பவர்கள் ஆகவும், நிலைமைக்கேட்ப முடிவெடுப்பவர்களாகவும் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பன பற்றி கணிசமான அளவு தெரிந்தவர்களாகவும் உள்ளனர் என்பது கண்கூடு.

இதன்முலம்அந்த வகையிலேயே தற்போதைய தியத்தலாவ இராணுவ அக்கடமியில் அமைச்சர்களை அழைத்து நாட்டின் எதிர்காலத்துக்கான பாதைவரைபு எனும் கருப்பொருளில் இருநாட்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது.

ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு இராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் அமைச்சர்கள் சென்று தமது கருத்தை சொல்லமுடியாது.

இராணுவம் சொல்லும் கருத்துக்கள், விரிவுரைகளை இவர்கள் கேட்க வேண்டும் என்பதை மிகவும் திட்டமிட்டு இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனலாம்.

இலங்கை பாரிய இராணுவ இயந்திரத்துக்குள் சிக்குண்டுள்ளது என்பதும் இதிலிருந்து மீள்வது கடினம் என்பதும் நோக்கர்களின் கருத்தாகும்.

போர் முடிந்து, தற்போது போர்க்குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்கும் இலங்கை, எல்லாம் முடியும் முன்பே தான் வளர்த்த இராணுவதால் சிக்கி சின்னாபின்னமாகலாம் இதன்முலம்



0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.