Sunday, February 26, 2012

கூட்டமைப்பு தமிழர்களுக்கு துரோகம் இழைத்தமை வரலாற்றுப் பதிவாகும்!- கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்

தமிழர்களின் அறவழி ஆயுதவழி போராட்டங்களின் வெற்றியின் பலனாக, சர்வதேச அரங்கில் தமிழர் சார்பாக பொறுப்புக் கூறுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பை தானாக தவற விட்டு,
ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கூட்டமைப்பு துரோகம் இழைத்தது எமது வரலாற்றில் பதிவாகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எம் சமூகம் பல தசாப்தங்களாக பல வித இழப்புக்களையும் அநீதிகளையும், பழி வாங்கல்களையும் அனுபவித்து, வருகின்றமை உலகறிந்த உண்மை.
இந்நிலையிலேயே, மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை எம் சமூகம் பல வித அழிவுகளுக்கும் அநீதிகளுக்கும் உள்ளாகியமை பற்றி, ஜெனீவாவில் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல் நழுவல் போக்குடன் பதில் அளித்திருப்பதை அனுமதிக்க முடியாது.

கலந்து கொள்வதில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பல வித அறிவிப்புக்கள் எல்லாம் அறிவித்து தாயகம், உலகத் தமிழ் இனமே பல வித எதிர்பார்புடன் இருந்த தருணத்தில் தகுந்த காரணம் எதுவும் இல்லாமல் கூட்டமைப்பு தலைமை அறிக்கை விட்டிருப்பது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய நிலையில், எந்த உள் நோக்கத்திற்காக சர்வதேசம் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்கிறதோ, அதை விட அதீத கரிசனை வட- கிழக்கு மக்களின் கணிசமான வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களிடம் இருக்க வேண்டும்.

அதைவிடுத்து மாயையான வகையில் இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இவைகள் இரண்டு தொடர்பாகவும் நாமும் அறிக்கை விட்டுள்ளோம் என கூறுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

இனப்பிரச்சனை விடயத்தில் எந்தவித தடைகளையும் இலங்கை அரசு போடக் கூடாது என்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கருத்துப்படக் கூறியிருப்பது பல ஜயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்வதன் மூலம் எம் சமூகம் சாந்து பல விடயங்களை தெளிவுபடுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடப்பட்டதை என்றும் வரலாறு மறவாது. சிங்களத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் ஓரிரு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற சந்திப்புக்களில் பல ஜயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது என கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.