Sunday, February 05, 2012

நோர்வேயில் தமிழீழத் தேசியத்தலைவரின் தபால் தலை வெளியீடு


சிறீலங்காவின் சுதந்திரநாள் 04.02.2012. ஆனால் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்ட கரியநாளாக உலகத் தமிழரால் அடையாளப்படுத்தப்பட்டு அடையாள கவனயீர்ப்பு நிகழ்வுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்நாளில் நோர்வே பாராளமன்றத்தின் முன்பாக தமிழீழத் தேசியத் தலைவரின் தபால்தலை மற்றும் தமிழீழத் தேசிய சின்னங்களான சிறுத்தை செண்பகம் காந்தாள் மலர் ஆகியவற்றின் தபால் தலைகள் நோர்வே தமிழ் மக்களால் வெளியீடு செய்யப்பட்டு தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.



எத்தனை தடைகள் வந்தாலும் விடுதலைக்காக உயர்ந்த கரங்களை எந்த அந்நிய சக்தியாலும் சிதைக்க முடியாது என்பதர்க்கு முள்ளிவாய்காலுக்கு பின்பு நோர்வே மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான பணியில் இந்த தபால் முத்திரை வெளியீடும் சான்றாக நிற்கும் அதேவேளை நோர்வே மக்களை மீண்டும் எழுச்சி கொள்ளவைத்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.